menu-iconlogo
logo

Kana kaanum kangal

logo
เนื้อเพลง
கனா காணும் கண்கள் மெல்ல

உறங்காதோ பாடல் சொல்ல

நிலாக்கால மேகம் எல்லாம்

உலாப் போகும் நேரம் கண்ணே

கனா காணும் கண்கள் மெல்ல

உறங்காதோ பாடல் சொல்ல

நிலாக்கால மேகம் எல்லாம்

உலாப் போகும் நேரம் கண்ணே

உலாப் போகும் நேரம் கண்ணே

Film-Agni saatchi

Music-Msv

Singer-S.p.Balasubramaniam,Saritha

குமரி உருவம் குழந்தை உள்ளம்

ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

தலைவன் மடியில் மகளின் வடிவில்

தூங்கும் சேயோ

குமரி உருவம் குழந்தை உள்ளம்

ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

தலைவன் மடியில் மகளின் வடிவில்

தூங்கும் சேயோ

நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி

விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி

விளக்கு ஏற்றி வைத்தால் கூட

நிழல் போலத் தோன்றும் நிஜமே

நிழல் போலத் தோன்றும் நிஜமே

" நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்

நிழலையோ பூஜிக்கிறேன்

அதனால் தான் உன் நிழல் விழுந்த

இடத்தின் மண்ணைக் கூட என்

நெற்றியில் நீரு போல் திருநீரு போல்

இட்டுக் கொள்கிறேன் "

கனா காணும் கண்கள் மெல்ல

உறங்காதோ பாடல் சொல்ல

Film-Agni saatchi

Music-Msv

Singer-S.p.Balasubramaniam,Saritha

புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில்

உண்டான காயம் என்ன

நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்

பாவம் என்ன

கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்

விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்

வருங்காலம் இன்பம் என்று

நிகழ்காலம் கூறும் கண்ணே

நிகழ்காலம் கூறும் கண்ணே

கனா காணும் கண்கள் மெல்ல

உறங்காதோ பாடல் சொல்ல

நிலாக்கால மேகம் எல்லாம்

உலாப் போகும் நேரம் கண்ணே

உலாப் போகும் நேரம் கண்ணே

ம்ம்ம் ஹ்ம்ம்

Thank you for choosing this song

Film-Agni saatchi

Music-Msv

Singer-S.p.Balasubramaniam,Saritha

Kana kaanum kangal โดย msv – เนื้อเพลง & คัฟเวอร์