menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก
நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடி போகும்

கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே

புன்னகையின் வாசமின்றி இன்று வரை பூமி மேலே

நிம்மதியில் வாழ்ந்ததாக இல்லை யாருமே

துன்பமும் இன்பமும் கற்றுத் தரும் காலமே

நம்பினால் யாவும் மாறுமே நம்பு மனமே

உன்னையும் என்னையும் ஒன்றிணக்கும் வாழ்விலே

அன்புதான் பாலமாகுமே

அன்புதான் பாலமாகுமே

ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராே

இன்று யார்யாரோ செய்த அன்பால் நெஞ்சம் பூத்ததோ

எல்லா நாளுமே விதை நெல்லாய் ஆகுமே

அன்பால் யாருமே பக்கம் வந்து நின்றால் போதுமே

சிறு வெள்ளைத் தாளின் மீது

பல வண்ணம் சேரும் போது

அங்கே தான் உண்டாகும் தன்னால் மாற்றமே

இந்த நம்பிக்கை ஒன்றே தான் நம்மை தேற்றுமே

เพิ่มเติมจาก N.R. Raghunanthan/Sai Vignesh

ดูทั้งหมดlogo