சித்திரமே
சொல்லடி
முத்தமிட்டால்
என்னடி
ித்திரமே
சொல்லடி
முத்தமிட்டால்
என்னடி
நித்தம் நித்தம்
தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டு தொட்டு
நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
சித்திரமே
சொல்லடி
முத்தமிட்டால்
என்னடி
கன்னி இதழ் மீது
தென்றல் படும்போது
அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்த சுகம் வேறு
சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்
சித்திரமே
நில்லடி
முத்தமில்லை
சொல்லடி
மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
அது மாறிவிட்டால்
இந்த மேனியிலே
ஒரு தேனாறு
ஓடுமில்லையா
இடை தானாக
வாடுமில்லையா
சித்திரமே
நில்லடி
முத்தமில்லை
சொல்லடி
பாலிருக்கும் கிண்ணம்
மேலிருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
அந்த கோலமெல்லாம்
இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான கோடி
இல்லையோ
அதை காணாமல் போவதில்லையோ
சித்திரமே
நில்லடி
முத்தமில்லை
சொல்லடி
நித்தம் நித்தம்
தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டு தொட்டு
நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
ஆ...
சித்திரமே
நில்லடி
முத்தமில்லை
சொல்லடி