SONG: போகப் போக தெரியும்
பார்த்தால் உன் மேனி
பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரை
கேட்டிருப்பேன்
பார்த்தால் உன் மேனி
பார்த்திருப்பேன்
கேட்டால் உன் பேரை
கேட்டிருப்பேன்
என் காதல் உனக்காக
பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல்
இருப்பதென்ன
என் காதல் உனக்காக
பாதை வகுத்தாலும்
பயணம் வாராமல்
இருப்பதென்ன
காலம் நேரம்
பிறக்கும்
நம் காதல்
கதவுகள் திறக்கும்
நம் கண்கள்
அப்போது துடிக்கும்
உன் கன்னம்
எப்போது சிவக்கும்
போகப் போக
தெரியும்
இந்த பூவின் வாசம்
புரியும்
ஆஹா... ஓஹோ...
SONG: காத்திருந்த கண்களே
மைவிழி வாசல்
திறந்ததிலே
ஒரு மன்னவன்
நுழைந்ததென்ன
அவன் வருகையினால்
இந்த இதழ்களின் மேலே
புன்னகை
விளைந்ததென்ன
MUSIC
மைவிழி வாசல்
திறந்ததிலே
ஒரு மன்னவன்
நுழைந்ததென்ன
அவன் வருகையினால்
இந்த இதழ்களின் மேலே
புன்னகை
விளைந்ததென்ன
பொழுதொரு
கனவை
விழிகளிலே
கொண்டு வருகின்ற
வயதல்லவோ..
பொழுதொரு
கனவை
விழிகளிலே
கொண்டு வருகின்ற
வயதல்லவோ..
ஒரு தலைவனை
அழைத்து
தனியிடம் பார்த்து
தருகின்ற
மனதல்லவோ..
தருகின்ற
மனதல்லவோ
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும்
வெள்ளமே
பொங்கி பெருகும்
உள்ளமே
SONG: தாமரை கன்னங்கள்...
ஆலிலை மேலொரு
கண்ணனைப் போலவன்
வந்தவனோ
நூலிடை மேலொரு
நாடகமாடிட
நின்றவனோ...
ஆலிலை மேலொரு
கண்ணனைப் போலவன்
வந்தவனோ
நூலிடை மேலொரு
நாடகமாடிட
நின்றவனோ...
சுமை கொண்ட
பூங்கொடியின்
சுவை கொண்ட
தேன்கனியை
உடை கொண்டு
மூடும்போது...
உறங்குமோ
உன்னழகு...
தாமரை
கன்னங்கள்...
தேன்மலர்
கிண்ணங்கள்
எத்தனை
வண்ணங்கள்...
முத்தமாய்
சிந்தும்போது
பொங்கிடும்
எண்ணங்கள்
ஆ...
மாலையில்
சந்தித்தேன்
மையலில்
சிந்தித்தேன்
மங்கை நான்
கன்னித்தேன்
காதலன்
தீண்டும் போது
கைகளை
மன்னித்தேன்
SONG: சித்திரமே நில்லடி
பாலிருக்கும் கிண்ணம்
மேலிருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம்
இல்லையோ
பாலிருக்கும் கிண்ணம்
மேலிருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம்
இல்லையோ
அந்த கோலமெல்லாம்
இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான
கோடி இல்லையோ
அதை காணாமல்
போவதில்லையோ
சித்திரமே
நில்லடி
முத்தமில்லை
சொல்லடி
நித்தம் நித்தம்
தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டு தொட்டு
நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
ஆ...
சித்திரமே
சொல்லடி
முத்தமில்லை
சொல்லடி
SONG: ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
மேகம் வந்த
வேகத்தில்
மோகம் வந்தது
மெல்ல மெல்ல
நாணத்தில்
தேரும் வந்தது
கன்னிப் பெண்ணின்
மேனியில்
மின்னல் வந்தது
காதல் என்றதோர்
மழை வெள்ளம்
வந்தது
பெண்ணும்
பெண்ணல்ல
இணைந்த
கண்ணும்
கண்ணல்ல
மலர்ந்த
பூவும் பூவல்ல
அமர்ந்த
வண்டும்
வண்டல்ல
ஊடல் கொண்டு
கூடல் கொண்ட
பாடல் ஒன்றல்ல
இடை ஒரு வேதனை
நடை ஒரு
வேதனை கொள்ள
இதழ் ஒரு
பாவமும்
முகம் ஒரு
பாவமும் சொல்ல
ராஜ ராஜ ஸ்ரீ
ராஜன் வந்தான்
ராஜ போகம்
தர வந்தான்