menu-iconlogo
logo

Germaniyin Senthen Malare

logo
เนื้อเพลง
ஆண் ஜெர்மெனியின் செந்தேன் மலரே

தமிழ் மகளின் பொன்னே சிலையே

ஜெர்மெனியின் செந்தேன் மலரே

தமிழ் மகளின் பொன்னே சிலையே

காதல் தேவதையே...

காதல் தேவதை பார்வை கண்டதும்

நான் எனை மறந்தேன்

ஜெர்மெனியின் செந்தேன் மலரே

பெண் சித்திரமே செந்தேன் மழையே

முத்தமிழே கண்ணா அழகே

காதல் நாயகனே...

காதல் நாயகன் பார்வை கண்டதும்

நான் எனை மறந்தேன்

சித்திரமே செந்தேன் மழையே

முத்தமிழே கண்ணா அழகே

ஆண் பூஞ்சோலையே பெண்ணானதோ இரு

பொன்வண்டுகள் கண்ணானதோ

பெண் பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி

என்னாளுமே கொண்டாடலாம்

ஆண் லா ல வா வா வா

குளிர் நிலவின் ஒளி நீயே

பெண் லா ல லா அ அ அ

எனதன்பின் சுடர் நீயே

ஆண் சுகம் நூறாக வேண்டும்

பெண் பா பா ப பா பா

உன் தோளில் பூபோல சாய்ந்தாட வந்தேன்

நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்

ஆண் ஜெர்மெனியின் செந்தேன் மலரே

தமிழ் மகளின் பொன்னே சிலையே

காதல் தேவதையே...

பெண் காதல் நாயகன் பார்வை கண்டதும்

நான் எனை மறந்தேன்

பெண் பேரின்பமே என்றாலென்ன அதை

நீயென்னிடம் சொன்னாலென்ன

ஆண் பேரின்பமே நீதானம்மா அதை

நீயென்னிடம் தந்தாலென்ன

பெண் பா ப வா வா வா

எனை அணைத்தே கதை சொல்ல

ஆண் லா ல லா வா வா

அதைச் சொல்வேன் சுவையாக

பெண் வெகு நாளாக ஆசை

ஆண் ரபா ப பா பா

ஆண் என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்

நீ சொல்லும் பாடம் சொர்க்கம்

பெண் சித்திரமே செந்தேன் மழையே

முத்தமிழே கண்ணா அழகே

காதல் நாயகனே

ஆண் காதல் தேவதை பார்வை கண்டதும்

நான் எனை மறந்தேன்

ஜெர்மெனியின் செந்தேன் மலரே

தமிழ் மகளின் பொன்னே சிலையே

பா பா ப ப ப பா பா பா பா ப ப ப பா பா

பா பா ப ப ப பா பா பா பா ப ப ப பா பா

பா பா ப ப ப பா பா பா பா ப ப ப பா பா

Germaniyin Senthen Malare โดย S. P. Balasubrahmanyam/K. S. Chithra – เนื้อเพลง & คัฟเวอร์