menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก
படம் : அன்பே சங்கீதா

இசை : இளையராஜா

பாடியவர் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

பாடலாசிரியர் : வாலி

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆஅ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆஅ ஆஅ ஆ..

ஆ ஆ ஆ ஆ

ஆஅ ஆஅ ஆ..

ஆ ஆ ஆ ஆ

ஆஅ ஆஅ ஆ

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்

வண்ணம் கெடாமல் வாழ்கின்றது..

நினைவில் உலவும் நிழல் மேகம்..

நூறாண்டுகள்....

நீ வாழ்கவே....

நூறாண்டுகள் ....

நீ வாழ்கவே..

ஆ ஆ ஆ அ ஆ அ ஆ அ

ஆ அ ஆ அ ஆ அ

ஆ....

ஒருவன் இதயம் உருகும் நிலையில்

அறியா குழந்தை நீ வாழ்க..

உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்

உறங்கா மனதை நீ காண்க..

கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி

சிந்தும் நாதங்கள் கேட்டாயோ...

மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே

கேளம்மா...

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்

ஆ....

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ..

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ..

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்

மறந்தா இருக்கும் உன் வீணை..

மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்

மறவேன் மறவேன் உன் ஆணை..

நீ இல்லையே இங்கு நான் இல்லையே

எந்தன் ராகங்கள் தூங்காது..

அவை ராகங்களா இல்லை சோகங்களா

சொல்லம்மா..

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்

வண்ணம் கெடாமல் வாழ்கின்றது

நினைவில் உலவும் நிழல் மேகம்

நூறாண்டுகள்....

நீ வாழ்கவே.....

நூறாண்டுகள் ....

நீ வாழ்கவே....

เพิ่มเติมจาก S. P. Balasubrahmanyam/S. P. Sailaja

ดูทั้งหมดlogo