menu-iconlogo
logo

Ithu nee irukkum ithu nee irukkum

logo
เนื้อเพลง

கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்

இங்கு என்னிடத்தில் கோபமும் ஏன்

சின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன்

உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்

மேகங்கள் மூடும் கருவானம் கூட

காற்றுகள் வந்தால் தெளிவாகுமே

பதில் தேவையா உயிர் தேவையா

இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மணி

ஒரு ராகம் சொல்லி தேடுகின்றேன் கண்மணி

இது நீ இருக்கும் ஹோய்....

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி

இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி

ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி

அது வெட்ட வெளியாச்சுதடி கண்மணி

என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே

உன்ன சேராமல் உள்ளம் வாழாதே

உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா

இது நீ இருக்கும் ஹோய்....

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி

இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி

இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி

............நன்றி.........

Ithu nee irukkum ithu nee irukkum โดย S.A. Rajkumar – เนื้อเพลง & คัฟเวอร์