என்னை விட்டு ஓடிப்போக
முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி
தெரியுமா ..தெரியுமா
என்னை விட்டு ஓடிப்போக
முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி
தெரியுமா ..தெரியுமா
கண்ணுக்குள்ளே தவழ்ந்து
கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து அதில்
இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
ஓ..ஓ.. ஓ…
உன்னை விட்டு ஓடிப்போக
முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு
என்ன தெரியுமா … தெரியுமா
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க
மஞ்சக் கயிரு எடுத்தது உனது
கழுத்தில் முடிக்கும்
இன்ப நாள் தெரியும்போது
ஆ..ஆ..ஆ..
என்னை விட்டு ஓடி போக
முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி
தெரியுமா தெரியுமா
மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி புது பாதை காட்டி
உறவாடும் திரு நாளின் இரவில்
இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்
ஆ..ஆ..ஆ.. ம்.. ம்…ம்..
ஓ..ஓ.. ஓ…
உன்னை விட்டு ஓடி போக
முடியுமா அது முடியுமா
என் உள்ளம் காணும் கனவு
என்ன தெரியுமா தெரியுமா
உன்னை விட்டு ஓடி போக
முடியுமா அது முடியுமா
என் உள்ளம் காணும் கனவு
என்ன தெரியுமா தெரியுமா