menu-iconlogo
logo

Isai Kettal Puvi

logo
เนื้อเพลง
ஆ... ஆ... ஆ... ஆ...

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

அது இறைவன் அருளாகும் ( இசை )

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

அது இறைவன் அருளாகும்

ஏழாம் கடலும் வானும் நிலமும்

என்னுடன் விளையாடும்

இசை என்னிடம் உருவாகும்

இசை என்னிடம் உருவாகும்

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

அது இறைவன் அருளாகும்

என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என் மேன்மை இறைவா உன் அருளாதலால்...

என் மேன்மை இறைவா உன் அருளாதலால்

எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

ஏழாம் கடலும் வானும் நிலமும்

என்னுடன் விளையாடும்

இசை என்னிடம் உருவாகும்

இசை என்னிடம் உருவாகும்

விதியோடு விளயாடும் ராகங்களே

விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே

கனலேந்தி வாருங்கள் தீபங்களே... ஏ... ஏ...

கனலேந்தி வாருங்கள் தீபங்களே

கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே

கரைந்தோடும் நோய் என்னும்

பாவங்களே ( இசை )

தத்தும் கடலலை ஓடி ஓடி வரும்

எந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும்

தீபங்களே... ( இசை )

எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்

இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன

தீபங்களே... ( இசை )

கண்ணில் கனல் வர பாட வேண்டுமெனில்

மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும்

தீபங்களே... தீபங்களே...

தீபங்களே... தீபங்களே...

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

அது இறைவன் அருளாகும்...

Isai Kettal Puvi โดย Sivaji Ganesan – เนื้อเพลง & คัฟเวอร์