menu-iconlogo
logo

Partha Niyabagam Illayo

logo
เนื้อเพลง

S1&S2: ஆ ஹா... அஹா அஹா ஹா...

ஆ ஹா... அஹா அஹா ஹா...

ஆ ஹா... அஹா அஹா ஹா...

S1: பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

S2: பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

S1: வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே இந்த நெஞ்சமோ..

Both: பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

S1: அந்த நீல நதிக் கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

( இசை )

அந்த நீல நதிக் கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

நான் பாடி வந்தேன் ஒரு ராகம்

நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

S2: இந்த இரவைக் கேள் அது சொல்லும்

அந்த நிலவைக் கேள் அது சொல்லும்

( இசை )

இந்த இரவைக் கேள் அது சொல்லும்

அந்த நிலவைக் கேள் அது சொல்லும்

உந்தன் மனதைக் கேள் அது சொல்லும்

நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

S1: அன்று சென்றதும் மறந்தாய் உறவை

இன்று வந்ததே புதிய பறவை

(இசை)

S2: அன்று சென்றதும் மறந்தாய் உறவை

இன்று வந்ததே புதிய பறவை

S1: எந்த ஜென்மத்திலும் ஓரு தடவை

நாம் சந்திப்போம் இந்த நிலவை

S2: பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

S1: வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே இந்த நெஞ்சமோ

Both: பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ....

Partha Niyabagam Illayo โดย Sivaji Ganesan – เนื้อเพลง & คัฟเวอร์