menu-iconlogo
huatong
huatong
avatar

Raathiriyil Poothirukum

S.P.Balasubramanium/S.Janakihuatong
miriam_garcia_luvz12huatong
เนื้อเพลง
บันทึก
ஆ: ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடி வர

தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடி வர

தூது விடும் கண்ணோ

பெ: வீணை எனும் மேனியிலே

தந்தியினை மீட்டும்

ஆ: கைவிரலில் ஒரு வேகம்

கண்ணசைவில் ஒரு பாவம்

பெ: வீணை எனும் மேனியிலே

தந்தியினை மீட்டும்

ஆ: கைவிரலில் ஒரு வேகம்

கண்ணசைவில் ஒரு பாவம்

பெ: வானுலகே பூமியிலே

வந்தது போல் காட்டும்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்

ஆ: ஜீவ நதி நெஞ்சினிலே

ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடி வர

தூது விடும் கண்ணோ

ஆ: மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

பெ: மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

ஆ: மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

பெ: மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

ஆ: வாழை இல்லை நீர் தெளித்து

போடடி என் கண்ணே

வாழை இல்லை நீர் தெளித்து போடடி என் கண்ணே

பெ: நாதசுரம் ஊதும் வரை

நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடி வர

தூது விடும் கண்ணோ

ஆ: சேலைச் சோலையே

பருவ சுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

பெ: ராஜ சுகம் தேடி வர

தூது விடும் கண்ணோ

เพิ่มเติมจาก S.P.Balasubramanium/S.Janaki

ดูทั้งหมดlogo