ஏன்னா நீங்க சமத்த நீங்க அசடா
சமத்தா இருந்தா கொடுப்பேளா
அசடா இருந்தா மறுப்பேளா
ஏன்டி, புதுசா கேட்குர என்ன பாத்து
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
ஏன்னா, அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும்
அவ ஒன்னா சேர்ந்துக்குரா
அடிச்சாலும் புடிச்சாலும்
அவ ஒன்னா சேர்ந்துக்குரா
அடிச்சதுக்கொன்னு புடிச்சதுக்கொன்னு
புடவைய வாங்கிகுரா
பட்டு, புடவைய வாங்கிகுரா...
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி வாங்குறான்டி
பட்டு, அடுத்தாத்து சங்கதி
எல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி வாங்குறான்டி
மூன்றெழுத்து மூனு
ஷோவும் பாத்தது நீதான்டி
மூன்றெழுத்து மூனு
ஷோவும் பாத்தது நீதான்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா
புடவைக்கு ஏதடி
பட்டு, புடவைக்கு ஏதடி!
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேன்டி
Brought to you by
திரைப்படம்: எதிர்நீச்சல் (1968)
இசை: V. குமார்
பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன், P. சுசிலா
சரணம் 1
உங்களுக்குதான் வாக்கப்பட்டு
என்னத கண்டா பட்டு
உங்களுக்குதான் வாக்கப்பட்டு
என்னத கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகநட்டுண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகநட்டுண்டா நேக்கு
எட்டுக் கல்லு வேசரி போட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு வேசரி போட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது, இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு, ம் ம்!
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
சரணம் 2
ஏட்டிக்குப் போட்டி பேசாதடி பட்டு...
பேசினா என்ன வப்பேளா ஒரு குத்து...
ஆத்திரம் வந்தா பொல்லாதவன்டி கிட்டு...
என்னத்த செய்வேள்?
சொன்னத்த செய்வேன்!
வேறன்ன செய்வேள்?
அடக்கி வப்பேன்!
அதுக்கும் மேல?
ம்ம்... பல்ல ஒடப்பேன்!
(அழுவது) ம்ம்.... அ அ அ ...
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா
அவ ஆத்துக்காரர்
கொஞ்சுரத கேட்டேளா அ அ அ....
பட்டு! அடுத்தாத்து சங்கதி
எல்லாம் நமக்கேன்டி..
பட்டு, நமக்கேன்டி..
பட்டு, நமக்கேன்டி..