menu-iconlogo
logo

Oru Tharam Orey Tharam

logo
เนื้อเพลง
ஒரு தரம் ஒரே தரம்

உதவி செய்தால் என்ன பாவம்

இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்

ஒரு தரம் ஒரே தரம் உதவி

செய்தால் என்ன பாவம்

இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்

இருவருக்கும் முதல் மயக்கம்

இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்

பெண்மை என்றால் கண் மறைவாய்

மூடி வைத்தால் சுவை இருக்கும்

இருவருக்கும் முதல் மயக்கம்

இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்

உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால்

காலமெல்லாம் சுவை இருக்கும்

ஒரு தரம் ஒரே தரம்

உறவு தேடும் கண்கள் பாவம்

தனிமையில் உருகிடும்

பார்வையில் என்னென்ன பாவம்

வண்ணச்சிலை எதிர் வந்தாளோ

கண்ணுக்கொரு பதில் தந்தாளோ

தொட்டுக்கொள்ள தடை செய்வாளோ

தத்தி தத்தி மெல்ல செல்வாளோ

தங்கவளை தளிர்க்கையோடு

வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு

முத்துப்பந்தல் நகை தன்னோடு

மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு

ஒரு தரம் ஒரே தரம் உறவு

தேடும் கண்கள் பாவம்

தனிமையில் உருகிடும்

பார்வையில் என்னென்ன பாவம்

சித்திரத்தின் முகம் கண்டேனே

செம்பவழ நிறம் என்றேனே

உண்ண உண்ண இதழ் செந்தேனே

உன்னிடத்தில் என்னை தந்தேனே

இல்லை என்னும் இடை தள்ளாட

மெல்ல மெல்ல உன்னை மன்றாட

சொல்ல சொல்ல தொட வந்தாயோ

என்ன என்ன சுகம் கண்டாயோ

ஒரு தரம் ஒரே தரம்

உதவி செய்தால் என்ன பாவம்

இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்

ஒரு தரம்

ஒரே தரம்

Oru Tharam Orey Tharam โดย T.M. Soundararajan/P. Susheela – เนื้อเพลง & คัฟเวอร์