menu-iconlogo
logo

எண்ணப்பறவை சிறகடித்து

logo
เนื้อเพลง
எண்ணப்பறவை சிறகடித்து

விண்ணில் பறக்கின்றதா

உன் இமைகளிலே

உறக்கம் வர

கண்கள் மறுக்கின்றதா

எண்ணப்பறவை சிறகடித்து

விண்ணில் பறக்கின்றதா

உன் இமைகளிலே

உறக்கம் வர

கண்கள் மறுக்கின்றதா

தென்றல் பாடும் தாலாட்டில் நீ

இன்பம் பெறவில்லையா

தென்றல் பாடும் தாலாட்டில் நீ

இன்பம் பெறவில்லையா

இரவு தீர்ந்திடும் வரையில்

விழித்திருந்தாலே

துன்பம் தரவில்லையா

இரவு தீர்ந்திடும் வரையில்

விழித்திருந்தாலே

துன்பம் தரவில்லையா

உன் துயர் கண்டால்

என்னுயிர் இங்கே

துடிப்பது தெரியல்லையா

உண்மையறிந்தும்

உள்ளம் வருந்த

நடப்பது தவறில்லையா

எண்ணப்பறவை சிறகடித்து

விண்ணில் பறக்கின்றதா

உன் இமைகளிலே

உறக்கம் வர

கண்கள் மறுக்கின்றதா

ஊஞ்சலைப்போலே

பூங்கரம் நீட்டி

அருகில் நெருங்கிடவா

ஊஞ்சலைப்போலே

பூங்கரம் நீட்டி

அருகில் நெருங்கிடவா

உன்னை உரிமையினாலே

குழந்தையைப் போலே

அள்ளி அணைத்திடவா

உன்னை உரிமையினாலே

குழந்தையைப் போலே

அள்ளி அணைத்திடவா

அன்னையைப்போலே

உன்னுடல் தன்னை

வருடி கொடுத்திடவா

நீ அமைதியுடன்

துயில் கொள்ளும்

அழகை ரசித்திடவா

எண்ணப்பறவை சிறகடித்து

விண்ணில் பறக்கின்றதா

உன் இமைகளிலே

உறக்கம் வர

கண்கள் மறுக்கின்றதா

எண்ணப்பறவை சிறகடித்து โดย TMS – เนื้อเพลง & คัฟเวอร์