பெண்: பருத்தி எடுக்கையிலே
என்னைப் பலநாளும் பார்த்த மச்சான்
பருத்தி எடுக்கையிலே
என்னைப் பலநாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ?
ஒருத்தி இருக்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ?
ஆண்: ஓடித்தான்
வந்திருப்பேன் .... நான்
உன்னை மட்டும் பார்த்திருந்தா
ஓடித்தான் வந்திருப்பேன் .... நான்
உன்னை மட்டும் பார்த்திருந்தா
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி
ஓடித்தான் வந்திருப்பேன்
நான் உன்னை மட்டும் பார்த்திருந்தா
பெண்: ஒத்தையடிப் பாதையிலே ....
ஒருத்தி நான் போகையிலே .
ஒத்தையடிப் பாதையிலே ....
ஒருத்தி நான் போகையிலே ..
பித்தனைப்போல நித்தம் நித்தம்
சுத்தி சுத்தி வந்தாயே
பித்தனைப்போல நித்தம் நித்தம்
சுத்தி சுத்தி வந்தாயே
ஆண்: சுத்தி சுத்தி
வந்ததினால்.......... ஆஆஆஆ .....
சுத்தி சுத்தி வந்ததினால்
சொந்தமாகி போனவளே .....
சித்தம் குளிர இப்போ ......
சேர்த்தணைக்கப் போறேண்டீ
ஏன் சித்தம் குளிர இப்போ
சேர்த்தணைக்கப் போறேண்ண்டீ
பெண் : பருத்தி் எடுக்கையிலே
என்னைப் பலநாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ?
ஒருத்தி இருக்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ?
ஆண்: ஓடித்தான்
வந்திருப்பேன் .... நான்
உன்னை மட்டும் பார்த்திருந்தா
பெண்: சேர்த்தணைக்கும் வேளையிலே
சென்றவர்கள் வந்து விட்டால்
சேர்த்தணைக்கும் வேளையிலே
சென்றவர்கள் வந்து விட்டால்
பார்த்து சிரித்திடுவார்
பழிபோட்டுப் பேசிடுவார்
பார்த்து சிரித்திடுவார்
பழிபோட்டுப் பேசிடுவார்
ஆண் : சிரிப்போரும் பழிப்போரும்
சேர்ந்து வந்து வாழ்த்திடவே .
சிரிப்போரும் பழிப்போரும்
சேர்ந்து வந்து வாழ்த்திடவே
திருமுருகன் அருளாலே
திருமணம்தான் செய்திடுவோம்
திருமுருகன் அருளாலே
திருமணம்தான் செய்திடுவோம்
பெண்: பருத்தி எடுக்கையிலே...
என்னைப் பலநாளும்
பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ?
ஒருத்தி இருக்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ?
ஆண்: ஓடித்தான்
வந்திருப்பேன் நான்
உன்னை மட்டும் பார்த்திருந்தா
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி
பெண்: பருத்தி் எடுக்கையிலே
என்னைப் பலநாளும்
பார்த்த மச்சான்
பலநாளும் பார்த்த மச்சான்