menu-iconlogo
huatong
huatong
a-m-rajah-paattu-paada-vaa-cover-image

Paattu Paada Vaa

A. M. Rajahhuatong
teleboy0huatong
Şarkı Sözleri
Kayıtlar
பாட்டு பாடவா..... பார்த்து பேசவா....

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால் நிலாவை போலவந்த பாவை அல்லவா

நானும் பாதை தேடி ஓடிவந்த காளை அல்லவா

பாட்டு பாடவா... பார்த்து பேசவா....

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா

நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா..... பார்த்து பேசவா.....

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே

மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே

மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே

பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா

இங்கே பார்வையோடு பார்வைசேர தூது வேண்டுமா

பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா

இங்கே பார்வையோடு பார்வைசேர தூது வேண்டுமா

மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா

இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா

பாட்டு பாடவா... பார்த்து பேசவா....

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா

நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா..... பார்த்து பேசவா......

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே

நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே

நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே

கண்ணிறைந்த காதலனை காணவில்லையா

இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா

கண்ணிறைந்த காதலனை காணவில்லையா

இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா

காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா

இல்லை காத்துகாத்து நின்றதுதான் மீதமாகுமா

பாட்டு பாடவா பார்த்து பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா

நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா... பார்த்து பேசவா.....

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

A. M. Rajah'dan Daha Fazlası

Tümünü Görlogo