menu-iconlogo
logo

Pudhu Vellai Mazhai(short version)

logo
Şarkı Sözleri
நீ அணைக்கின்ற வேளையில்

உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால்

உயிர்ப்பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை

உன் கண்கள் பந்தாடுதோ

மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா

எந்தன் மார்போடு வந்தாடுதோ

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை

இங்கு பொழிகின்றது

இந்த கொள்ளை நிலா

உடல் நனைகின்றது

புது வெள்ளை மழை

இங்கு பொழிகின்றது

இந்த கொள்ளை நிலா

உடல் நனைகின்றது