ஆ:மலரே..ஏ ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
• • •• • •.• • •• • •
மலரே..ஏ ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
• • •• • •.• • •• • •
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தம்மிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா.. ஆ
பெ:விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே
Movie : Poomagal Oorvalam
Music: Siva
Singer’s: Hariharan & Sujatha
Lyrics: Vairamuthu
பதிவேற்றம்: senthilkumaran
• • • saranam -1 • • •
ஆ:வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை…ஐ..
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை…ஐ..
பெ:நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை.. ஐ
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை
ஆ:மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை.. ஐ..
பெ:கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
ஆ:வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடா..தடி..ஈ..ஈ
முத்தம் தராமல் வெட்கம்
சாயம் போகா..தடி
மலரே..ஏஏ ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
• • •• • •.• • •• • •
• • • saranam -2 • • •
பெ:பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் தீண்டும் மட்டும்
அவசியம் புரியாது… ஈ..ஈ
ஆ: காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
பெ:இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அவிழாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது.. ஈஈ..
ஆ: ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
உன் எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
பெ:கைகள் தொடாமல் கண்களால்
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
ஆ:மலரே.. ஏ ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
• • •• • •.• • •• • •
மலரே.. ஏ ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
• • •• • •.• • •• • •
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா.. ஆ
மலரே.ஏ ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
• • •• • •.• • •• • •
Thanks
My other songs search on
“senthilkumaran”