menu-iconlogo
huatong
huatong
avatar

Vaigaasi Nilave

Haricharan/Madhushree/Vaali/Vinayhuatong
paulawaula38huatong
Şarkı Sözleri
Kayıtlar
வைகாசி நிலவே

வைகாசி நிலவே

மைபூசி வைத்திருக்கும் கண்ணில்

நீ..

பொய்பூசி வைத்திருப்பதென்ன

வெட்கத்தை உடைத்தாய்

கைகுள்ளே அடைத்தாய்

தண்ணீரை ஊற்று குளிர்ந்திட

நான்..

தள்ளாடி தத்தளிக்கும் நேரம்

விழியில் இரண்டு விலங்கு இருக்கு

அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு

என் ஜீவன் வாழும் வரை ஓ..

என் செய்வாய் நாளும் எனை

வைகாசி நிலவே

வைகாசி நிலவே

மைபூசி வைத்திருக்கும் கண்ணில்

நீ..

பொய்பூசி வைத்திருப்பதென்ன

தூவானம் என

தூரல்கள் விழ

தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே

கண்ணா நீ பொறு

கட்டுக்குள் இரு

காதல் கைக் கூடட்டும்

இதோ..எனக்காக விரிந்தது

இதழ்..எடுக்கவா தேனே

கனி..எதற்காக கனிந்தது

அணில்..கடித்திட தானே

ஓ..காலம் நேரம் பார்த்துக்கொண்டா

காற்றும் பூவும் காதல் செய்யும்

வைகாசி நிலவே

வைகாசி நிலவே

மைபூசி வைத்திருக்கும் கண்ணில்

நீ..

பொய்பூசி வைத்திருப்பதென்ன

ஓ…வெட்கத்தை உடைத்தாய்

கைகுள்ளே அடைத்தாய்

தண்ணீரை ஊற்று குளிர்ந்திட

நான்..

தள்ளாடி தத்தளிக்கும் நேரம்

நூலாடை என

மேலாடை என

பாலாடை மேனி மீது படரட்டுமா

நான் என்ன சொல்ல

நீ என்னை மெல்ல

தீண்டி தீவைக்கிராய்

அனல்..கொதித்தாலும் அணைத்திடும்

புனல்..அருகினில் உண்டு

கனை..நெருப்பாக இருக்கையில்

என்னை..தவிப்பது கண்டு

ஓ..மோகத்தீயும் தேகத்தீயும்

தீர்த்தம் வார்த்து தீராதும்மா

வைகாசி நிலவே

வைகாசி நிலவே

மைபூசி வைத்திருக்கும் கண்ணில்

நீ..

பொய்பூசி வைத்திருப்பதென்ன

ஓ…வெட்கத்தை உடைத்தாய்

கைகுள்ளே அடைத்தாய்

தண்ணீரை ஊற்று குளிர்ந்திட

நான்..

தள்ளாடி தத்தளிக்கும் நேரம்

ஆ..விழியில் இரண்டு விலங்கு இருக்கு

அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு

என் ஜீவன் வாழும் வரை ஓ..

என் செய்வாய் நாளும் எனை

என் ஜீவன் வாழும் வரை ஓ..

என் செய்வாய் நாளும் எனை..?

Haricharan/Madhushree/Vaali/Vinay'dan Daha Fazlası

Tümünü Görlogo