menu-iconlogo
logo

Nilavukku En Mel

logo
Şarkı Sözleri
இசை

பதிவேற்றம்:

நிலவுக்கு என்மேல் என்னடி

கோபம் நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி

கோபம் முள்ளாய் மாறியது

நிலவுக்கு என்மேல் என்னடி

கோபம் நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி

கோபம் முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல் என்னடி

கோபம் கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி

கோபம் கணையாய் பாய்கிறது

நிலவுக்கு என்மேல் என்னடி

கோபம் நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி

கோபம் முள்ளாய் மாறியது

இசை

பதிவேற்றம்:

குலுங்கும் முந்தானை சிரிக்கும்

அத்தானை விரட்டுவதேனடியோ

குலுங்கும் முந்தானை சிரிக்கும்

அத்தானை விரட்டுவதேனடியோ

உந்தன் கொடியிடை என்று படை

கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ

திருமண நாளில் மணவறை மீது

இருப்பவன் நான் தானே

என்னை ஒருமுறை பார்த்து

ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

நிலவுக்கு என்மேல் என்னடி

கோபம் நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி

கோபம் முள்ளாய் மாறியது..

இசை

பதிவேற்றம்:

சித்திரை நிலவே அத்தையின்

மகளே சென்றதை மறந்துவிடு ஆ…

சித்திரை நிலவே அத்தையின்

மகளே சென்றதை மறந்துவிடு

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான்

எனக்கு பார்வையை திறந்துவிடு

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான்

எனக்கு பார்வையை திறந்துவிடு

நிலவுக்கு என்மேல் என்னடி

கோபம் நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி

கோபம் முள்ளாய் மாறியது

நன்றி

பதிவேற்றம்:

P.b. Sreenivas, Nilavukku En Mel - Sözleri ve Coverları