menu-iconlogo
huatong
huatong
avatar

Anbe Anbe

Prashanthini/A.r. Rahman/Aishwarya Raihuatong
🖤♛քʍօɦǟʍɛɖ508♛🖤huatong
Şarkı Sözleri
Kayıtlar
பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : …………………………………

ஆண் : அன்பே அன்பே

கொல்லாதே ........

கண்ணே கண்ணை

கிள்ளாதே........

பெண்ணே..... புன்னகையில்

இதயத்தை வெடிக்காதே

ஐயோ..... உன்னசைவில்

உயிரைக் குடிக்காதே

ஆண் : அன்பே அன்பே

கொல்லாதே.......

கண்ணே கண்ணை

கிள்ளாதே........

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : பெண்ணே உனது

மெல்லிடை பார்த்தேன்

அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன்

தலை சுற்றிப் போனேன்

ஆஹா அவனே வள்ளலடி

மின்னலைப் பிடித்துத்

தூரிகை சமைத்து

ரவிவர்மன்

எழுதிய வதனமடி

நூறடிப் பளிங்கை

ஆறடி ஆக்கிச் சிற்பிகள்

செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில்

பிறந்த பெண்ணில்

நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும்

மொத்தம் சேர்ந்து என்னை

வதைப்பது கொடுமையடி

அன்பே அன்பே கொல்லாதே.......

கண்ணே கண்ணை கிள்ளாதே.......

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : அழகிய நிலவில்

ஆக்ஸிஜன் நிரப்பி

அங்கே உனக்கொரு

வீடு செய்வேன்

உன்னுயிர் காக்க

என்னுயிர் கொண்டு

உயிருக்கு உயிரால்

உனையிடுவேன்

ஆண் : …………………………………

மேகத்தைப் பிடித்து

மெத்தைகள் அமைத்து

மெல்லிய பூ உன்னைத்

தூங்க வைப்பேன்

தூக்கத்தில் மாா்பில்

வேர்க்கின்ற போது

நட்சத்திரம் கொண்டு

நான் துடைப்பேன்

பால் வண்ணப் பறவை

குளிப்பதற்காக

பனித்துளி எல்லாம்

சேகரிப்பேன்

தேவதை குளித்த

துளிகளை அள்ளித்

தீர்த்தம் என்றே

நான் குடிப்பேன்

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே........

அன்பே அன்பே கொல்லாதே.....

கண்ணே கண்ணை கிள்ளாதே......

பெண்ணே..... புன்னகையில்

இதயத்தை வெடிக்காதே

ஐயோ..... உன்னசைவில்

உயிரைக் குடிக்காதே

அன்பே அன்பே கொல்லாதே......

கண்ணே கண்ணை கிள்ளாதே.........

Prashanthini/A.r. Rahman/Aishwarya Rai'dan Daha Fazlası

Tümünü Görlogo
Prashanthini/A.r. Rahman/Aishwarya Rai, Anbe Anbe - Sözleri ve Coverları