menu-iconlogo
logo

Thillana Thillana (Short Ver.)

logo
Şarkı Sözleri

பட்டிக்காட்டு முத்து நீயோ

படிக்காத மேதை

தொட்டுத் தொட்டுப் பேசத்தானே

துடித்தாளே ராதை

கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை

மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை

கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா

அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா

முடிகொண்டு உன் மார்பில்

முகம் சாய்க்க வேண்டாமா

முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

தில்லானா தில்லானா

நான் தித்திக்கின்ற தேனா

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஹோவ்

மஞ்சக் காட்டு மைனா

உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஓ ஓஓ ஓ ஓ

ஓ ஓஓ ஓ ஓ

கண்ணு வெச்சதும் நீதானா

அடி கண்ணி வெச்சதும் நீதானா

கட்டில் போட்டு நான் கப்பம்

கட்ட காமன் சொன்னானா

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு

கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன

கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே

கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே

மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே

மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே

சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே

சிக்குப்பட்ட எள் போலே

நொக்குப்பட்டேன் உன்னாலே

கட்டுத்தறி காளை நானும்

கட்டுப்பட்டேன் உன்னாலே

Thank you...

Rajnikanth/Meena, Thillana Thillana (Short Ver.) - Sözleri ve Coverları