menu-iconlogo
huatong
huatong
avatar

Koottippo Koodave (From "Junga")

Ranina Reddyhuatong
starlight1951huatong
Şarkı Sözleri
Kayıtlar
நீ யாரோ யாரோ

நீ யாரோ!

நின்றாய் யாதுமாய்

நீளாதோ இந்நாள் தூரமாய்!

போகாத சாலை

பொன் வேளை!

வான் காணா வானிலை!

நேராத ஏதோ நேரலை!

நீ யாரோ யாரோ

நீ யாரோ!

நின்றாய் யாதுமாய்

நீளாதோ இந்நாள் தூரமாய்!

போகாத சாலை

பொன் வேளை!

வான் காணா வானிலை

நேராத ஏதோ நேரலை!

அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம்

மென்மையாய் கைகோர்த்துப் போகவே...!

மெதுவாய் மேல்நாட்டு மேகம் ஏங்கும்

நகரா நாள் வேண்டுமே வேண்டுமே!

ஆகாயம் தாண்டியும் கூட்டிப்போ கூடவே!

ஆளில்லாத் தீவுகள்

கூட்டிப்போ கூடவே!

காணாத வேறிடம்

கூட்டிப்போ கூடவே!

வாழாத ஓரிடம்

கூட்டிப்போ கூடவே!

நிகழாத சூழல்

நிகர் இல்லாத முதல் காட்சியே!

அழகே நீ தந்தாய்

என் வாழ்வையே!

ஒளி பாயும் காலம்

குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே!

அடைந்தேனே உன்னை

அடையாளமே!

பாதாதி கேசம் தோன்றாத மாற்றமே!

பாராத தேசம் வாராத வாசமே!

ஆகாயம் தாண்டியும்

கூட்டிப்போ கூடவே!

ஆளில்லாத் தீவுகள்

கூட்டிப்போ கூடவே!

காணாத வேறிடம்

கூட்டிப்போ கூடவே!

வாழாத ஓரிடம்

கூட்டிப்போ கூடவே!

நீ யாரோ யாரோ

நீ் யாரோ!

நின்றாய் யாதுமாய்

நீளாதோ இந்நாள் தூரமாய்!

போகாத சாலை!

பொன் வேளை!

வான் காணா வானிலை!

நேராத ஏதோ நேரலை!

உன்னுடன் நான் சேர்ந்து போகின்றபோது

உண்மையில் தோள்சாயத் தோன்றுதே!

உணர்வில் நீ பூத்து நிற்கின்றபோது

உணரா ஒரு வாசமே வாசமே!

ஆகாயம் தாண்டியும்

கூட்டிப்போ கூடவே!

ஆளில்லாத் தீவுகள்

கூட்டிப்போ கூடவே!

காணாத வேறிடம்

கூட்டிப்போ கூடவே!

வாழாத ஓரிடம்

கூட்டிப்போ கூடவே!

Ranina Reddy'dan Daha Fazlası

Tümünü Görlogo