menu-iconlogo
logo

Aagaya Thaamarai Arugil vanthathe

logo
Şarkı Sözleri
M:ஆகாய தாமரை

அருகில் வந்ததே...

நாடோடி பாடலில்

உருகி நின்றதே...

ஆகாய தாமரை

அருகில் வந்ததே

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

ஆகாய தாமரை

F:அருகில் வந்ததே

நாடோடி பாடலில்

உருகி நின்றதே

காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

M:ஆகாய தாமரை

அருகில் வந்ததே

M:மெல்லிசை பாட்டு

முழங்கிட கேட்டு

இதயமே இளகுதா

இள மயிலே

F:நீ மந்திரன் போலே

மணி தமிழாலே

இசைக்கிறாய் இழுக்கிறாய்

இளவரசே

M:ஒரு மட மாது

இணை பிரியாது

இருக்குமோ மறக்குமோ

ஒரு பொழுதென்னும்

அருவியை மீனும்

பிரியுமோ விலகுமோ

M:என்று இந்த

லீலை எல்லாம்

எல்லை தாண்டி போவது

F:கைகள் ஏந்தும்

வேளையெல்லாம்

கன்னி போகும் பூவிது

M:முத்தம் தலைவன்

இதழ் பதித்திட

இதயம் தித்தித்திட

புதிய மது ரசம் வழிந்திட

F:ஆகாய தாமரை

அருகில் வந்ததே

M:நாடோடி பாடலில்

உருகி நின்றதே

M:புன்னகை முல்லை

புது விழி குவளை

அழகிய அதரங்கள்

அரவிந்த பூவோ

உன் கன்னங்கள்

ரோஜா கொடி இடை அள்ளி

நிறத்தினில் நீ ஒரு

செவ்வந்திப்பூவோ

செண்பகம் ஒன்று

பெண் முகம் கொண்டு

எனக்கென பிறந்ததோ

குன்றினில் தோன்றும்

குறிஞ்சியும் இங்கே

குமரியாய் விளைந்ததோ

F:மின்னும் வண்ண

பூக்கள் எல்லாம்

மாலை என்று ஆகலாம்

மன்னன் தந்த மாலை எந்தன்

நெஞ்சை தொட்டு ஆடலாம்

நெஞ்சை தழுவியது

துலங்கிட உறவு விளங்கிட

இனிய கவிதைகள் புனைந்திட

M:ஆகாய தாமரை

அருகில் வந்ததே

F:நாடோடி பாடலில்

உருகி நின்றதே

M:காவல் தனை தாண்டியே

காதல் துணை வேண்டியே

F:ஆகாய தாமரை

S. Janaki/Ilaiyaraja, Aagaya Thaamarai Arugil vanthathe - Sözleri ve Coverları