menu-iconlogo
huatong
huatong
avatar

Thaalattuthey Vaanam

S Janaki/Jayachandrahuatong
kibles1huatong
Şarkı Sözleri
Kayıtlar
அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்

அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கூடும் காவிரி இவ தான் என் காதலி

குளிர் காயத் தேடித்

தேடி கொஞ்சத் துடிக்கும்

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்

அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கட்டுமரத் தோணி போல

கட்டழகன் உங்க மேல

சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ

பட்டுடுத்த தேவையில்ல

முத்துமணி ஆசையில்ல

பாசம் நெஞ்சோடு உண்டல்லோ

பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு

பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது

பாய் மேல நீ போடு தூங்காத விருந்து

நாளும் உண்டல்லோ

அத நானும் கண்டல்லோ

இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்

அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

வெள்ளி அலை தாளம் தட்ட

சொல்லி ஒரு மேளம் கொட்ட

வேளை வந்தாச்சு கண்ணம்மா

மல்லியப்பூ மாலை கட்ட

மாரியிட வேலை கிட்ட

மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா

கடலோரம் காத்து ஒரு

கவி பாடும் பாத்து

தாளாம நூலானேன்

ஆளான நான் தான்

தோளோடு நான் சேர

ஊறாதோ தேன் தான்

தேகம் ரெண்டல்லோ

இரு ஜீவன் ஒன்றல்லோ

இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று

கூடும் இன்றல்லோ

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்

அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கூடும் காவிரி இவ தான் ஒன் காதலி

குளிர் காயத் தேடித்

தேடி கொஞ்சத் துடிக்கும்

அந்தியிலே வானம் ..

ஹா

தந்தனத்தோம் போடும் ..

ஹா ஹா

அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும்

ஹேய்

சுந்தரியைப் பாரும்

ஆஹா

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

S Janaki/Jayachandra'dan Daha Fazlası

Tümünü Görlogo