menu-iconlogo
huatong
huatong
avatar

Iravukkum Pagalukkum

T. M. Soundararajan/P. Susheelahuatong
eaglebird1huatong
Şarkı Sözleri
Kayıtlar
பெண்:இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை

இதயத்தில் விழுந்தது திருமண மாலை

உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்

உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

இருவர் என்பதே இல்லை இனி நாம்

ஒருவர் என்பதே உண்மை.....

ஆண்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை

இதயத்தில் விழுந்தது திருமண மாலை

உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்

உலகம் நமக்கினி ஆ..னந்தக் கோலம்

இருவர் என்பதே இல்லை இனி நாம்

ஒருவர் என்பதே உண்மை

பெண்: ம்ம்..இருவர் என்பதே இல்லை இனிநாம்

ஒருவர் என்பதே உண்மை…

ஆண்: பாதிக் கண்களை மூ..டித்திறந்து

பார்ப்பதில் இன்பம்

பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி

ரசிப்பதில் இன்பம் ஆ..ஆ..ஆ..

பாதிக்கண்களை மூ…டித்திறந்து

பார்ப்பதில் இன்பம்...

பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி

ரசிப்பதில் இன்பம்…..

பெண்: பாதிப்பாதியாய் இருவரும் மாறி

பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்

காலை என்பதே துன்பம் இனிமேல்

மாலை ஒன்று தான் இன்பம்….

காலை என்பதே துன்பம் இனிமேல்

மாலை ஒன்று தான் இன்பம்

ஆண்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை

இதயத்தில் விழுந்தது திருமண மாலை

பெண்: உறவுக்கும் உரிமைக்கும்

பிறந்தது நேரம்

உலகம் நமக்கினி ஆனந்தக்கோலம்

ஆண்: இருவர் என்பதே இல்லை இனி நாம்

ஒருவர் என்பதே உண்மை

பெண்: ஆ...ஆ...ஆ...

இருவர் என்பதே இல்லை இனி நாம்

ஒருவர் என்பதே உண்மை.....

பெண்: ஆடை இதுவென நிலவினை எடுக்கும்

ஆனந்த மயக்கம்...

ஆண்: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று

அணைப்பது பழக்கம்...

பெண்: ஆ…ஆ…ஆ... ஆடை இதுவென

நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்....

ஆண்:அம்மா குளிரென ஒன்றினை ஒன்று

அணைப்பது பழக்கம்....

பெண்: காலை நேரத்தில் காயங்கள் பார்த்து

தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்

ஆண்: கவிஞர் சொன்னது கொஞ்சம்

இனிமேல் காணப்போவது மஞ்சம்..

பெண்: ஆ...ஆ...

ஆண்:கவிஞர் சொன்னது கொஞ்சம்

இனிமேல் காணப்போவது மஞ்சம்

இருவரும்: இரவுக்கும் பகலுக்கும்

இனி என்ன வேலை

இதயத்தில் விழுந்தது திருமண மாலை

உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்

உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

இருவர் என்பதே இல்லை இனி நாம்

ஒருவர் என்பதே உண்மை.....

இருவர் என்பதே இல்..லை இனி நாம்

ஒருவர் என்பதே உண்மை.....

லால லாலா லல ல ல லலல லாலா லல ல ல லாலா

லால லாலா லல ல ல லலல லாலா லல ல ல லாலா

T. M. Soundararajan/P. Susheela'dan Daha Fazlası

Tümünü Görlogo