menu-iconlogo
logo

Aadaludan Paadalai

logo
Şarkı Sözleri
பாடல் தலைப்பு ஆடலுடன் பாடலை கேட்டு

திரைப்படம் குடியிருந்த கோயில்

நடிகர் எம்.ஜி.ஆர்

நடிகை ஜெயலலிதா

பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்

பாடகி P.சுசீலா

இசையமைப்பாளர் .எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடலாசிரியர்கள் – வாலி

இயக்குநர் – கே.சங்கர்

தமிழ் வரிகளில் ஐசக்

பெண் ஆடலுடன் பாடலை கேட்டு

ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ...

ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆஹோய்

ஆடலுடன் பாடலை கேட்டு

ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆண் ஆசை தரும் பார்வையில் எல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ...

ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆஹோய்

ஆசை தரும் பார்வையில் எல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

இருவர் ஆடலுடன் பாடலை கேட்டு

ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையில் எல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கேட்பதற்கு இனிமையான

பாடல்களை தங்களின்

இனிமையான குரலில்

நீங்கள் பாடி மகிழ

என்று நீங்கள் தேடினால்

என்னுடைய

அணைத்து பாடல்களும்

தங்களுக்கு கிடைக்கும்

ஆண் கண்ணருகில் பெண்மை குடி ஏற

கையருகில் இளமை தடுமாற

தென்னை இள நீரின் பதமாக

ஒன்று நான் தரவா இதமாக...

ஆ... ஆ... ஹய்...

கண்ணருகில் பெண்மை குடி ஏற

கையருகில் இளமை தடுமாற

தென்னை இள நீரின் பதமாக

ஒன்று நான் தரவா இதமாக...

ஆ... ஆ... ஹய்...

பெண் செங்கனியில் தலைவன் பசியாற

தின்ற இடம் தேனின் சுவையூற

பங்கு பெற வரவா துணையாக...

ஆ... ஆ... ஹய்...

செங்கனியில் தலைவன் பசியாற

தின்ற இடம் தேனின் சுவையூற

பங்கு பெற வரவா துணையாக... ஆ... ஆ...

மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட

உரியவன் நீ தானே

இருவர் ஆடலுடன் பாடலை கேட்டு

ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையில் எல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கேட்பதற்கு இனிமையான

பாடல்களை தங்களின்

இனிமையான குரலில்

நீங்கள் பாடி மகிழ

என்று நீங்கள் தேடினால்

என்னுடைய

அணைத்து பாடல்களும்

தங்களுக்கு கிடைக்கும்

ஆண் கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு

களைப்பாற மடியில் இடம் போடு

உள்ளிருக்கும் நினைவில் உறவாடு

உலகையே மறந்து விளையாடு... ஏ... ஏ... ஹோய்

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு

களைப்பாற மடியில் இடம் போடு

உள்ளிருக்கும் நினைவில் உறவாடு

உலகையே மறந்து விளையாடு... ஏ... ஏ... ஹோய்

பெண் விம்மி வரும் அழகில் நடை போடு

வந்திருக்கும் மனதை எடை போடு

வேண்டியதை பெறலாம்

துணிவோடு... ஆ... ஆ... ஆ...

விம்மி வரும் அழகில் நடை போடு

வந்திருக்கும் மனதை எடை போடு

வேண்டியதை பெறலாம் துணிவோடு... ஆ... ஆ...

உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்

புதுமையை நீ பாடு

ஆடலுடன் பாடலை கேட்டு

ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ...

ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆஹோய்

ஆண் ஆசை தரும் பார்வையில் எல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆ...

ஸ்ஆ... ஸ்ஆ... ஸ்ஆஹோய்

இருவர் ஆடலுடன் பாடலை கேட்டு

ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையில் எல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

( இசை )

Tm Soundararajan/P. Susheela, Aadaludan Paadalai - Sözleri ve Coverları