menu-iconlogo
huatong
huatong
arunmozhis-janaki-vennilavukku-vaanatha-cover-image

Vennilavukku Vaanatha

Arunmozhi/S Janakihuatong
missangela0601huatong
بول
ریکارڈنگز
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா ?

என் கண்ணுமணிக்கு இந்தக்

காளையப் புடிக்கலையா ?

ஆ ஆஅ...

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா

என் கண்ணுமணிக்கு இந்தக்

காளையப் புடிக்கலையா

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா

என் கண்ணுமணிக்கு இந்தக்

காளையப் புடிக்கலையா

தென்றலே.. கொஞ்சம் நீ கேளு

இந்த சேதிய அங்கு நீ கூறு

ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு

இந்த சேதிய அங்கு நீ கூறு

ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது...

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா

என் கண்ணுமணிக்கு இந்தக்

காளையப் புடிக்கலையா

உன்னை விட சொந்தம் எது..

அன்பை விட சொர்க்கம் எது

உன்னை விட்டு நெஞ்சம் இது

எங்கே வாழப் போகின்றது

கண்ணைத் தொட்டு வாழும் இமை

என்றும் தனியாகாதம்மா

உன்னையன்றி என் ஜீவன்தான்

இங்கே இனி வாழாதம்மா

உன்னோடு இல்லாத என்

வாழ்வு எப்போதும் ஏது.. ஏது

ஒன்றான பின்னாலும் கண்மூட

நேரங்கள் ஏது.. ஏது

இது வானம் என வாழும்.. இனி மாறாது

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா

என் கண்ணுமணிக்கு இந்தக்

காளையப் புடிக்கலையா

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா

என் கண்ணுமணிக்கு இந்தக்

காளையப் புடிக்கலையா

சிந்தும் மழைச் சாரல் விழ..

அங்கம் அதில் மோகம் எழ

சொந்தம் ஒரு போர்வை தர..

சொர்க்கம் அது நேரில் வர

கன்னம் மது தேனைத் தர..

கண்ணன் அதை நேரில் பெற

கன்னிக் குயில் தோளில் வர..

இன்பம் சுகம் இங்கே வர

எந்நாளும் இல்லாத எண்ணங்கள்

முன்னோட.. ஏக்கம் கூட

என்னுள்ளம் காணாத வண்ணங்கள்

வந்தாட.. தூக்கம் ஓட

அலை போல.. மனம் ஓட.. புதுப் பண் பாட

வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா

இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா

வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா

இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா

தென்றலே.. கொஞ்சம் நீ கேளு

இந்த சேதிய அங்கு நீ கூறு

ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு

இந்த சேதிய அங்கு நீ கூறு

ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது.....

வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா

இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா

Arunmozhi/S Janaki کے مزید گانے

تمام دیکھیںlogo