menu-iconlogo
huatong
huatong
avatar

kannalaney

BOMBAYhuatong
pbutterflygirl5huatong
بول
ریکارڈنگز

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.

என் கண்களைப் பறித்துக் கொண்டு

ஏனின்னும் பேசவில்லை.

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலை பாயும் சிறு பேதை நானோ.

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ.

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ.

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.

என் கண்களைப் பறித்துக் கொண்டு

ஏனின்னும் பேசவில்லை.

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலை பாயும் சிறு பேதை நானோ.

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ.

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ.

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம்

நெஞ்சம்

தறி கெட்டுத் தளும்புது நெஞ்சம்.

எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம்

கொஞ்சம்

பிறை முகம் பார்த்தது கொஞ்சம்.

ரத்தம் கொதி கொதிக்கும்

உலை கொதித்திடும் நீர்க் குமிழ் போல.

சித்தம் துடி துடிக்கும்

புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல.

பனித் துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று மாறினள் மாது.

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.

என் கண்களைப்

பறித்துக் கொண்டு

ஏனின்னும் பேசவில்லை.

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலை பாயும் சிறு பேதை நானோ.

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ.

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ.

ஒரு மின்சாரம்

பார்வையின் வேகம் வேகம்

உன்னோடு நான் கண்டு கொண்டேன்.

ஒரு பெண்ணோடு தோன்றிடும்

காமம் காமம்

என்னோடு நான் கண்டுகொண்டேன்.

என்னை மறந்து விட்டேன்

இந்த உலகத்தில் நானில்லை நானில்லை.

முள்ளை இழந்துவிட்டால்

எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை.

இது கனவா இல்லை நினைவா

என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்.

உன்னைப் பார்த்தெந்தன்

தாய்மொழி மறந்தேன்.

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.

என் கண்களைப் j'பறித்துக் கொண்டு

ஏனின்னும் பேசவில்லை.

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலை பாயும் சிறு பேதை நானோ.

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ.

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ.

BOMBAY کے مزید گانے

تمام دیکھیںlogo