menu-iconlogo
logo

Idhuvum Kadandhu Pogum (The Healing Song) (From "Netrikann")

logo
بول
இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

சுடரி, இருளில் ஏங்காதே

வெளிதான் கதவை மூடாதே

அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே

அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே

மழைகாற்றோடு போகும் வரை போனால் என்ன

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன

சுடரி, சுடரி உடைந்து போகாதே

உடனே வலிகள் மறைந்து போகாதே

சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

எதுவும் கடந்து போகும்

அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

மனம்தான் ஒரு குழந்தையே

அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

அதுபோல் இந்த கவலையே

நாள்தோறும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

மழைகாற்றோடு போகும் வரை போனால் என்ன

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன

சுடரி, சுடரி உடைந்து போகாதே

உடனே வலிகள் மறைந்து போகாதே

சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே

மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே

வாசம்தான் பூவின் பார்வைகள் காற்றில் ஏறி காணும் காட்சிகள்

காணாமல் வெளியாக பார்த்திடுமே

சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே

பெருங்காற்றாக மாறிச் சென்று உறவாடுமே

சுடரி, சுடரி வெளிச்சம் தீராதே

அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே

அழகே சுடரி, அட ஏங்காதே

மலரின் நினைவில் மனம் வாடாதே

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

கடந்து போகும்

கடந்து போகும்

Idhuvum Kadandhu Pogum (The Healing Song) (From "Netrikann") بذریعہ Girishh G/Sid Sriram - بول اور کور