menu-iconlogo
logo

Naan Oru Muttaalunga

logo
بول
நான் ஒரு முட்டாளுங்க

நான் ஒரு முட்டாளுங்க

ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க

நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க

எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க

நான் ஒரு முட்டாளுங்க

கண் நிறைஞ்ச பெண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க

ஏ... ஏ ஏய் ஏய் கயிதே டேய்

கண் நிறைஞ்ச பெண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க

முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேலே அடிச்சாங்க

பேசாதயின்னாங்க பொரட்டி பொரட்டி எடுத்தாங்க

Piece piece'ah கியிச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க

நான் ஒரு முட்டாளுங்க

கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது

பால் கொண்டு போறதெல்லம் all-round'ah ஓடுது

மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது

ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது

நான் ஒரு முட்டாளுங்க

நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க

நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க

ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க

அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன்னாங்க

நான் ஒரு முட்டாளுங்க

ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க

நான் ஒரு முட்டாளுங்க

நான் ஒரு முட்டாளுங்க

ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க

நான் ஒரு முட்டாளுங்க முட்டாளுங்க முட்டாளுங்க