menu-iconlogo
logo

Vanil Vidivelli

logo
بول
வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம்

வாசலில் மாப்புள்ளி வைத்திடும் வைத்திடும் நேரம்

அதிகாலை சுப வேலை

உறங்காதே கண்ணா

எனை பார்த்து இமை மூடி நடிக்காதே மன்னா

போதும் வா என் ராஜாவே

வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம்

வாசலில் மாப்புள்ளி வைத்திடும் வைத்திடும் நேரம்

எங்கே அவள் உயிர் துணை போனதே

இங்கே அது பழங்கதை ஆனதே

அன்பே உன்னை இவன் மனம் தேடுதே

உந்தன் முகம் நிழல் என ஆடுதே

வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம்

கனவாய் களைந்தாலே கண்மணி கண்மணி தாரம்

தாயெனும் ஒரு தெய்வமேஅள்ளி எடுத்து எடுத்து வளர்த்து

போலுனை ஒரு பிள்ளையாய் அவள் இனிய இதயம் நினைக்க ஒஓ

யாவரும் அன்பில் உறுகியே

விண்ணில் பிணைந்து இணைந்து கிடக்க

நாளெல்லாம் சிறு குழந்தையாய் மனம் குலுங்கி குலுங்கி சிரிக்க

அண்ணன் என தம்பி என சொந்தம் கொண்டு வாழ

துன்பமின்றி துக்கம் இன்றி இன்பம் தினம் சூழ

பலவித பூக்களையும்

உறவெனும் நூல் எடுத்து

இறைவனும் தொடுக்க வைத்து ஆழகிய மாலை இது

கோலம் அதை கலைத்தது யாரம்மா

சிற்பம் உனை சிதைத்தது யாரம்மா

நந்தன் எனும் இழி மகன் தானம்மா

அம்மா ஹோ ஒ ஒ ஓ

வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம்

கனவாய் களைந்தாலே கண்மணி கண்மணி தாரம்

அதிகாலை சுப வேலை

உறங்காதே கண்ணா

எனை பார்த்து இமை மூடி நடிக்காதே மன்னா

போதும் வா என் ராஜாவே

பாசமாய் இரு ஜீவனும் அன்பை பொழிந்துபொழிந்து பழகும்

நேசமாய் நல்ல கவிதைகள் மெல்ல நெருங்கி நெருங்கி எழுதும் ஒ ஓ ஓ

பால் நிலா நல்ல பிறவியாய்

பிள்ளை வடிவில் மடியில் துலங்கும்

பல்கலை கொஞ்சும் கலகமாய்

இந்த இனிய குடும்பம் விளங்கும்

தென்றல் வந்து தொட்டில் கட்டும்

இல்லம் ஒரு கோவில்

தெய்வம் என மங்கை தொழும்

மன்னன் அதன் காவல்

மலர்வனம் போலிருந்த

மகிழ்ச்சிகள் பூத்திருந்த

புலமகன் வீடு இது

குருவிகள் கூடு இது

இன்னார் அந்த மலர்வணம் காய்ந்ததே

இங்கே ஒரு புயல் வர சாய்ந்ததே

கண்ணீர் மழை விழி வழி பாய்ந்ததே

அன்பே ஒ ஒ ஓ ஓ

வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம்

Vanil Vidivelli بذریعہ Jayachandran&S Janaki/Mano/S. Janaki - بول اور کور