menu-iconlogo
logo

Raasi Nalla Raasi

logo
بول
படம் : வீட்டு மாப்பிள்ளை

பாடியவர் ராஜா, ஜிக்கி

இசை ராஜா

ஆண் ம் ம் ம் ம் ம்

பெண் ஆ ஆ ஆ ஆ

பெண் ராசி நல்ல ராசி உன்னை

மாலையிட்ட மங்கை மகராசி

ராசி நல்ல ராசி உன்னை

மாலையிட்ட மங்கை மகராசி

உன் கை ராசி

ஆண் ராசி நல்ல ராசி

உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி

ராசி நல்ல ராசி

உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி

உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி

உன் கை ராசி

பெண் ராசி நல்ல ராசி

உன்னை மாலையிட்ட மங்கை மகராசி

உன் கை ராசி

உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி

சரணம்

பெண் நீ பறித்த பூவில்

நல்ல கள்ளிருந்தது அதை

நீ குடிக்க வந்தபோது முள்ளிருந்தது

நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது அதை

நீ குடிக்க வந்தபோது முள்ளிருந்தது

ஆண் போகப் போக பூவின்

உள்ளம் மாறி விட்டது

போகப் போக பூவின் உள்ளம் மாறி விட்டது

காயம் பட்ட மேனி தொட்டபோது ஆறி விட்டது

காயம் பட்ட மேனி தொட்டபோது ஆறி விட்டது

ராசி நல்ல ராசி

உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி

உன் கை ராசி

உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி

சரணம்

ஆண் மீனிருக்கும்

கண்களுக்குள் நானிருக்கவோ

இதழ் மலரும் போது மயங்கி

வந்து தேனெடுக்கவோ

மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ

இதழ் மலரும் போது மயங்கி

வந்து தேனெடுக்கவோ

பெண் இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ

இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ

இங்கு இடையில் வந்த தென்றலுக்கு

விடை கொடுக்கவோ இங்கு

இடையில் வந்த தென்றலுக்கு

விடை கொடுக்கவோ

ராசி நல்ல ராசி உன்னை

மாலையிட்ட மங்கை மகராசி

உன் கை ராசி

ஆண் ராசி நல்ல ராசி உன்னை

மாலையிட்ட மன்னன் சுகவாசி

உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி

உன் கை ராசி

இருவரும் ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

ம்.... ம்.... ம்...ம்..

ம்... ம்.... ம்.... ம்...

Raasi Nalla Raasi بذریعہ Jikki/A. M. Rajah - بول اور کور