ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ…
தென்கிழக்கு வாசமல்லி…
என்னைத் தேடி வர தூது சொல்லு…
ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ…
தென்கிழக்கு வாசமல்லி…
என்னைத் தேடி வர தூது சொல்லு…
பாதமலர் நோகுமுன்னு
நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன்…
மயிலே
பாதமலர் நோகுமுன்னு
நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன்…
மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ…
தென்கிழக்கு வாசமல்லி…
என்னைத் தேடி வர தூது சொல்லு…
(ஏரிக்கரை பூங்காற்றே)
ஓடிச்செல்லும் வான்மேகம்
நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ…
தென்கிழக்கு வாசமல்லி…
ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ…
தென்கிழக்கு வாசமல்லி…