கமல்: இய்யா... இய்யா... இய்யா...
நாட்டுக்கொரு சேதி சொல்ல
நாகரீக கோமாளி வந்தேனுங்க
ஆட்டம் ஆடி பாட்டு பாடி
அழகாக கதை சொல்ல வந்தேனுங்க
பட்ட பாட்ட பாட நானும் வந்தேனுங்க
படுற பாட்ட பாட நானும் வந்தேனுங்க
910ரூபா கதைய கேளுங்கோ
தொழிலாளர்கள் தொல்லபடும்
கதையக் கேளுங்கோ
ஐயா கேளுங்கோ அம்மா கேளுங்கோ
அண்ணே கேளுங்கோ அக்கா கேளுங்கோ
கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க
கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க
கேளுங்க கேளுங்க கேளுங்க கேளு
தத்தோம் கிழிச்சோம் சரிகை
என்பட்டு உன்பட்டு கிழிங்சிதுபோ
செத்தோம் பொழச்சோம் தினசரி
உன்தலை என்தலை உருளுதுபோ
ஆஹா... பெரியோர்களே...
அதாகப்பட்டது
கதையின் ஆரம்பத்திலே
நமது கதையின் நாயகன்
அதாவது 910ரூபாய் சம்பளக்காரன்
சக தொழிலாளர்கள் எல்லாம்
பேக்டரி கேட்டிலே இருந்து
சம்பளத்தை உசத்திக் கேட்டு
ஆர்பாட்டம் செய்து கொண்டு இருக்கையிலே
அவர்களுக்கு எல்லாம் கடுக்காய் கொடுத்துவிட்டு
மிடுக்காய் போகிறான்...
பெண்: எங்க போறான்
கமல்: போகும்போதே எங்க போறானு
கேட்டா உறுப்படுமா...
அவன்.....
டாவாடிக்க ஓடிப்போகுறான்
தனது காதலியத் தேடி போகிறான்
ஓஹோ.. ஓஹோ..
பெண்: ஓஹோ.. ஓஹோ..
கமல்: மாங்கா மூஞ்சிக்கு மஞ்சா
பூசி மயக்குற பொண்ணே
உன் முழி இரண்டும் மிரட்டுதடி
பொன்னான கண்ணே...
பெண்: அக்கான்...
கமல்: மாங்கா மூஞ்சிக்கு மஞ்சா
பூசி மயக்குற பொண்ணே
உன் முழி இரண்டும் மிரட்டுதடி
பொன்னான கண்ணே...
டவுனு பஸ்சு போகுதடி காலியா
நாம சினிமா கொட்டா
போய் வரலாம் ஜாலியா
டவுனு பஸ்சு போகுதடி காலியா
நாம சினிமா கொட்டா
போய் வரலாம் ஜாலியா
பெண்: வாங்குறது சம்பளம் 910
குடும்ப பாரம் சுமக்க
உனக்கு ஏதய்யா சத்து
உன்ன போல தொழிலாளி...
ஏய்.. உன்ன போல தொழிலாளி
தெருவில் நிக்கிறான்
போராட்ட கொடிய பிடிக்கிறான்
சம்பளத்தை ஒசத்தி கேக்குறான்
இப்போ உனக்கு காதல் எதுக்கு
அட இப்போ உனக்கு காதல் எதுக்கு
வழிய விட்டு ஒதுங்கு
யூனியன் ஆளோட இனங்கு
போராட்ட தெருவிலே இறங்கு
போராட்ட தெருவிலே இறங்கு
கமல்: காதலிடம்
ஞான உபதேசம் பெற்ற
நம் கதையின் நாயகன்...
தானும் போராட்டக் களத்தில் இறங்குகிறான்
குறைந்த பட்ச கூலிக்கென்று
சட்டம் இருக்குது
அதில் பைசா குறைக்க கூடாதுனு
திட்டம் இருக்குது
சட்ட திட்டம் 100 100 இருந்த போதிலும்
சிலர் இஷ்டம்போல ஊதியத்த
கொறச்சி வழங்குவார்
ஏழையை கடிச்சி முழுங்குவார்
பெண்: இவ்ளோ கம்மியா சம்பளம் தந்து
தொழிலாளிக்கி நொம்ளம் தந்த
பெரிய மனுசன் யாருப்பா...
அதோ அங்கே பாரப்பா
Music and Corus
மற்றவர்: வெள்ளுடை வேந்தே வாழ்க!
பலதொழில் அரசே வாழ்க!
பல்தொழில் முனைவா வாழ்க!
வியாபார காந்தம் வாழ்க!
கமல்: அதென்னடா இது வியாபார காந்தம்
மற்றவர்: பிஸினசு மேக்னட்டுன்னேன்
கமல்: போட்றா ஒன்னு தலைல
மற்றவர்: தலைவா வாழ்க!
வாழ்க வாழ்க வென்று வாய்கிழிய
கூவி கூவி வாழ்த்துப்பாடி
ஆஞ்சி ஓஞ்சிட்டோம்
வாழ்வு நாங்க எப்போ வாழ்வது
வாழ்வதற்கு எங்கே போவது
கமல்: டேய்... என்னனு போய் கேளுங்கடா
மற்றவர்: அவங்களுக்கு நாம
கூட்டி குடுக்கனுமாம்
கமல்: அடி செருப்பால...
மற்றவர்: அய்யய்யே... அதில்லிங்கய்யா...
அவங்களுக்கு சம்பளத்த
கூட்டி குடுக்கனுமாம்
கமல்: ஓஹோ...
கொடுக்க முடிந்தது 910 தான்
கொடுக்க முடியாது இனி ஒரு
பைசா சேத்துதான்
மற்றவர்: இவங்கள எப்டி சமாளிக்க
போறிங்க மொதலாளி
B:I have plan a new venture
B:our problems will be resolved
B:in the near futute
B:Oh Oh Oh
B:It's a good news
B:at this juncture
B:Joint venture
கமல்: மல்டி நேஷனல் கம்பெனியோட
B:laugh
அவங்க நாட்டுல இருந்து
ரா மெட்டிரியல்ஸ் நமக்கு அனுப்புவான்
மற்றவர்: எஸ்
கமல்: இறக்குமதி பண்றோம்
மற்றவர்: எஸ்
கமல்: ரிபைன் பண்றோம்
மற்றவர்: எஸ்
கமல்: பேக் பண்றோம்
மற்றவர்: எஸ்
கமல்: பிளான் பண்றோம்
மற்றவர்: எஸ்
B:(laugh)
கமல்: மார்க்கெட் பண்றோம்
மற்றவர்: மார்ககெட்கு ஸ்கோப் இல்லனா வாங்குவோம் உதை
இறக்குமதி பண்ண போவது எதை
கமல்: Teeeeeeeeeeeeeeeee
B:(sip) Tea
மற்றவர்: என்னது
கமல்: தேயிலை....
மற்றவர: அதுசரி
கமல்: இஷ்ஷ்...
மற்றவர்: அதுசரி
பிராபிட் மார்ஜின் எவ்வளவு
கமல்: அந்த மல்டி நேஷனல் கம்பெனிகாரன்
காக்கா கடி கடிச்சி தருவான்
40% நமக்கு 60% அவனுக்கு
மற்றவர்: அப்போ உள்ளூர் தேயிலை விவசாயியோட கதி
அவங்க எக்கேடு கெட்டா நமக்கென்ன
நமக்கு நம்ம வெளிநாட்டு
மொதலாளிங்க தான் முக்கியம்
அவங்களால கிடைக்கிற லாபம் முக்கியம்
பெண்: சதுரங்க ஆட்டத்திலே
முதலாளிகள் காய் நகர்த்த
தொழிலாளிகள் கைகள் என்ன பூ பறிக்குமா
இல்லை காய் பறிக்குமா
கமல்: கரைகள் தூங்க விரும்பினாலும்
அலைகள் விடுவதில்லை
மற்றவர்: விடுவதில்லை
கமல்: மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை
மற்றவர்: விடுவதில்லை
கமல்: ஓடி ஓடி ஒலிந்தபோதும்
வாழ்க்கை விடுவதில்லை
விடுவதில்லை விடுவதில்லை விடுவதில்லை
கமல்: சொடுக்கி விட்டான் எங்கிருந்தோ சாட்டய
சுத்தி விட்டான் பம்பரமா நாட்டையே
சூட்சும கயிறு எங்கிருந்து நீளுது
மற்றவர்: அமெரிக்காவிலே இங்கிலாந்திலே
பிரான்சிலே ஜெர்மனியிலே
நமக்கு ஒத்தாசைக்கு ஆள் இருக்கான்
நாம தனி மரம் இல்ல தோப்பு
வைக்கப் போறோம் பாரு ஆப்பு
கமல்: நமக்கு தேவை நல்லதொரு முடிவு
இந்த நாடகத்தில மட்டும் இல்லை
எல்லாத்துக்கும்
நல்ல முடிவு வேணும்னா
நாடககாரங்க நாங்க மட்டும்
மனசு வச்சா பத்தாது
நான்
நீ
அவரு
இவரு
அவங்க
இவங்க
அதோ நாடகத்தை கெடுத்துகிட்டு
கார்ல குறுக்கப் போறாங்களே
இவங்க
நாம எல்லாரும் மனசு வைக்கனும்
முடிவு எடுக்கனும்