menu-iconlogo
huatong
huatong
avatar

Idhu Maalai Neratthu Mayakkam

L. R. Eswari/T. M. Soundararajanhuatong
phasellhairhuatong
بول
ریکارڈنگز
ஆஹா அஹாஹாஹாஹா , ஆகா ஆஆஆ

இது மாலை நேரத்து மயக்கம்

பூ மாலை போல் உடல் மணக்கும்

இதழ் மேலே இதழ் மோதும்

அந்த இன்பம் தேடுது எனக்கும் ம்ம்ம்ம்

இது மாலை நேரத்து மயக்கம்

ஹெஹெஹெஹெ

இது கால தேவனின் கலக்கம்

இதை காதல் எனபது பழக்கம்

ஒரு ஆணும் ஒரு பெண்ணும்

பெற போகும் துன்பத்தின் துவக்கம் ம்ம்ம்

இது கால தேவனின் கலக்கம்

பணியும் நிலவும் பொழியும் நேரம்

மடியில் சாய்ந்தாள் என்ன ?

பசும் பாலை போலெ மேனி எங்கும்

பழகி பார்த்தல் என்ன ?

உடலும் உடலும் சேரும் வாழ்வை

உலகம் மறந்தால் என்ன ?

தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே

உண்மை அறிந்தால் என்ன?

உறவுக்கு மேலே சுகம் கிடையாது

அணைக்கவே தயக்கம் என்ன ?

இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்

இதற்குள்ளே ஆசை என்ன ?

இது மாலை நேரத்து மயக்கம்

முனிவன் மனமும் மயங்கும் பூமி

மோக வாசல்தானே

மனம் மூடி மூடி பார்க்கும் போதும்

தேடும் பாதைதானே

பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்

காதல் கானல் நீரே

இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்

போகும் ஞான தேரே

இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்

இதயமே மாறி விடு

நான் வாழ்ந்து பார்த்து

சாய்ந்த தென்னை

உன்னை நீ மாற்றிவிடு

இது கால தேவனின் கலக்கம்

இதை காதல் எனபது பழக்கம்

ஒரு ஆணும் ஒரு பெண்ணும்

பெற போகும் துன்பத்தின் துவக்கம்

L. R. Eswari/T. M. Soundararajan کے مزید گانے

تمام دیکھیںlogo