கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஓ ஓ ஓ ஓ ஓ .................
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா