பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை:இளையராஜா
ஆண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்
பெண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்
ஆண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஆண் : பூக்களின் கருவறையில்
பிறந்தவள் நீயா?
பூவுக்கொரு பூஜை செய்ய
பிறந்தவன் நான் இல்லையா
பெண் : இதயத்தின் தாமரையில்
இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி
தந்தவள் நான் இல்லையா
ஆண் : ஓடோடி வந்ததால்
உள்மூச்சு வாங்குது
பெண் : உன் மூச்சில் அல்லவா
என் மூச்சும் உள்ளது
ஆண் : ஒன்றானது...
பெண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஆண் : ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
பெண் : கல்லுரும் காலை
வேளையில்
ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்
பெண் : யாருக்கு யார் உறவு
யார் அறிவாரோ?
என் பெயரில் உன் பெயரை
இயற்கையும் எழுதியதோ?
ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால்
பூ மலராதோ?
பூ மகளின் வாய் மொழியே
பூஜைக்கு வேதங்களோவே?
பெண் : கல்லூரி வாழ்க்கையில்
காதல் ஏன் வந்தது
ஆண் : ஆகாயம் எங்கிலும்
ஈரம் யார் தந்தது?
பெண் : இயல்பானது..
ஆண் : ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
பெண் : ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
ஆண் : கல்லுரும் காலை
வேளையில்
பெண் : லல லல லால
லா லா லல லா லா
லல லல லால லா லா லல
லா லா