menu-iconlogo
huatong
huatong
avatar

Malarndhum Malaradha

T.M. Soundararajan/P. Susheelahuatong
bmwdakar1huatong
بول
ریکارڈنگز
பெ: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே

வந்து விடிந்தும் விடியாத

காலை பொழுதாக

விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி

நடந்த இளம் தென்றலே

வளர் பொதிகை மலை தோன்றி

மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

ஆ: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே

வந்து விடிந்தும் விடியாத

காலை பொழுதாக

விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி

நடந்த இளம் தென்றலே

வளர் பொதிகை மலை தோன்றி

மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

ஆ: யானை படை கொண்டு

சேனை பல வென்று

ஆளப்பிறந்தாயடா

புவி ஆளப்பிறந்தாயடா

அத்தை மகளை மணம் கொண்டு

இளமை வழி கண்டு வாழப்பிறந்தாயடா

வாழப்பிறந்தாயடா

அத்தை மகளை மணம் கொண்டு

இளமை வழி கண்டு...

அத்தை மகளை மணம் கொண்டு...

இளமை வழி கண்டு...

வாழப்பிறந்தாயடா...

பெ: தங்க கடியாரம்

வைர மணியாரம்

தந்து மணம் பேசுவார்

பொருள் தந்து மணம் பேசுவார்

மாமன் தங்கை மகளான

மங்கை உனக்காக

உலகை விலை பேசுவார்....

உலகை விலை பேசுவார்

மாமன் தங்கை மகளான

மங்கை உனக்காக...

மாமன் தங்கை மகளான....

மங்கை உனக்காக.....

உலகை விலை பேசுவார்

MUSIC

ஆ: நதியில் விளையாடி

கொடியில் தலை சீவி

நடந்த இளம் தென்றலே

வளர் பொதிகை மலை தோன்றி

மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

பெ: சிறகில் எனை மூடி

அருமை மகள் போல

வளர்த்த கதை சொல்லவா

கனவில் நினையாத காலம் இடை வந்து

பிரித்த கதை சொல்லவா...

பிரித்த கதை சொல்லவா

ஆ: கண்ணில் மணி போல

மணியின் நிழல் போல

கலந்து பிறந்தோமடா

இந்த மண்ணும் கடல் வானும்

மறைந்து முடிந்தாலும்

மறக்க முடியாதடா

உறவை பிரிக்க முடியாதடா

ம்... ம்... ம்... ம்...

பெ: அன்பே ஆரி ராராரோ

ஆரி ராராரோ

ஆரி ராராரிரோ

அன்பே ஆரி ராராரிரோ

ஆரி ராராரிரோ...

T.M. Soundararajan/P. Susheela کے مزید گانے

تمام دیکھیںlogo