menu-iconlogo
logo

Koodamela Koodavechi

logo
بول
ஆ: கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே

உன்கூட கொஞ்சம் நானும் வரேன்

கூட்டிகிட்டு போனா என்ன..

ஒத்தையில நீயும் போனா அது நியாயமா

உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா

நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா

நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

பெ: கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள

நீ கூட்டிகிட்டு போகசொன்னா

என்ன சொல்லும் ஊரும் என்ன

ஒத்துமையா நாமும் போக இது நேரமா

தூபத்தாலே தேச்சு வச்ச கரு ஈரமா

நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா

நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

பெ:சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள

நீ இருந்துது செரிக்காம சதி பண்ணுற

ஆ:சீயக்காய போல கண்ணில்

சிக்கிகிட்ட போதும் கூட

உறுத்தாம உயிர் கொல்லுற

பெ:அதிகம் பேசமா அளந்து தான் பேசி

எதுக்கு சட பின்னுற

ஆ:சல்லிவேர ஆணிவேராக்குற

சட்டபூவ வாசமா மாத்துற

பெ:நீ போகாத ஊருக்கு

பொய்யான வழி சொல்லுற

ஆ:கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே

பெ: நீ கூட்டிகிட்டு போகசொன்னா

என்ன சொல்லும் ஊரும் என்ன

ஆ: எங்கவேணா போயிக்கோ நீ

என்ன விட்டு போயிடாம

இருந்தாலே அது போதுமே

பெ: தண்ணியத்தான் விட்டுபுட்டு

தாமரையும் போனதுன்னா

தரமேல தலசாயுமே

ஆ: மறைஞ்சி போனாலும்

மறந்து போகாத

நெனப்புதான் சொந்தமே

பெ: பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே

உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே

ஆ: நீ பார்க்காம போனாலே

கிடையாதே மறுசென்மமே

ஆ: கூடமேல கூடவச்சி கூடலூரு..ஏ

கூடலூரு போறவளே

பெ: ம்.. நீ கூட்டிகிட்டு போகசொன்னா

என்ன சொல்லும் ஊரும் என்ன

ஆ:ஒத்தையில நீயும் போனா அது நியாயமா

உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா

பெ: நான் போறேன்னு சொல்லாம

வாறேனே உன் தாரமா..

பெ: நீ தாயேன்னு கேட்காம

தாரேனே தாராளமா

பதிவேற்றம்:

Koodamela Koodavechi بذریعہ Vandana Srinivasan/V.V. Prassanna - بول اور کور