menu-iconlogo
logo

Vaadikkai Maranthathum

logo
Lời Bài Hát
தனம் மூர்த்தி

வாடிக்கை மறந்ததும் ஏனோ

என்னை வாட்டிட ஆசை தானோ

பல கோடி மலர் அழகை

மூடி வைத்து மனதை

கொள்ளையடிப்பதும் ஏனோ

வாடிக்கை மறந்ததும் ஏனோ

வாடிக்கை மறந்திடுவேனோ

என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ

புது மங்கை எந்தன் மனதில்

பொங்கி வரும் நினைவில்

மாற்றம் சொல்வதும் ஏனோ

வாடிக்கை மறந்திடுவேனோ

தனம் மூர்த்தி

ஆ... ஆ.ஆ.ஆ...ஆ...

ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்

அன்பு மணக்கும் தேன்

சுவை பாட்டும்

அமுத விருந்தும் மறந்து போனால்

உலகம் வாழ்வதும் ஏது

பல உயிர்கள் மகிழ்வதும் ஏது

நெஞ்சில் இனித்திடும் உறவை

இன்பம் என்னும் உணவை

தனித்துப் பெற முடியாது

தனம் மூர்த்தி

ஓ... ஓ... ஓ... ஓ...

அந்தி நேரம் போனதால்

ஆசை மறந்தே போகுமா

அந்தி நேரம் போனதால்

ஆசை மறந்தே போகுமா

அன்புக் கரங்கள் சேரும் போது

வம்பு வார்த்தைகள் ஏனோ

இன்ப வேகம் தானோ

வாடிக்கை மறந்திடுவேனோ

என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ

புது மங்கை எந்தன் மனதில்

பொங்கி வரும் நினைவில்

மாற்றம் சொல்வதும் ஏனோ

ஆ... ஆ...

ஆ... ஆ...

காந்தமோ இது கண்ணொளி தானோ

காதல் நதியில் நீந்திடும் மீனோ

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ

பொறுமை இழந்திடலாமோ

பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ

நான் கருங்கல்லுச் சிலையோ

காதலெனக்கில்லையோ

வரம்பு மீறுதல் முறையோ

சைக்கிளும் ஓடமண் மேலே

இரு சக்கரம் சுழல்வது போலே

அணை தாண்டி வரும் சுகமும்

தூண்டி விடும் முகமும்

சேர்ந்ததே உறவாலே

ஆ... ஆ... ஆ... ஆ...ஆஆஆ....

ம்... ம்... ம்... ம்...ம்ம்ம்ம்......

Vaadikkai Maranthathum của AM Rajah/P. Susheela - Lời bài hát & Các bản Cover