menu-iconlogo
huatong
huatong
avatar

Malligai Mottu Manasa Thottu

Arunmozhi/Swarnalathahuatong
steveg89huatong
Lời Bài Hát
Bản Ghi
படம்: சக்திவேல்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: அருண்மொழி, சுவர்ணலதா

ஆ: மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதடி மானே

வளையல் மெட்டு வயச தொட்டு

வளைக்குதடி மீனே

மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதடி மானே

வளையல் மெட்டு வயச தொட்டு

வளைக்குதடி மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே

மாமன் நடத்துற பாடத்திலே

மானே மருதாணி பூசவா ஹோ ஓஹ்..

தேனே அடையாளம் போடவா

பெ: மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதய்யா மானே

வளையல் மெட்டு வயச தொட்டு

வளைக்குதய்யா மீனே

விலைக்கு வாங்கப்பட்ட

இந்த இனிய பாடலையும்

தமிழ் வரிகளையும்

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

பெ: மூடி வச்சு மூடி

வச்சு மறச்சுவச்சதெல்லாம்

காத்தடிச்சு காத்தடிச்சு

கலஞ்சு போனதென்ன

ஆ: பாடி வச்சு பாடி வச்சு

பதுக்கி வச்சதெல்லாம்

காதலிக்க காதலிக்க

வெளஞ்சு வந்ததென்ன

பெ: உன்னாலதான் உன்னாலதான்

உதிர்ந்து போச்சு வெக்கம்..

ஆ: கண்ணாலதான் கையாலதான்

கலந்துகிட்டா சொர்க்கம்

பெ: நானிருந்தேன் சாமி நோன்பினிலே

மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே

நானே மருதாணி பூசவா ஹோ..ஓ ..

நீயே அடையாளம் போடவா..

ஆ: மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதடி மானே

வளையல் மெட்டு வயச தொட்டு

வளைக்குதடி மீனே

பெ: மந்தாரச்செடி ஓரத்தில

மாமன் நடத்துற பாடத்துலே

நானே மருதாணி பூசவா ஹோ..ஓ..

நீயே அடையாளம் போடவா

விலைக்கு வாங்கப்பட்ட இந்த

இனிய பாடலையும்

தமிழ் வரிகளையும்

பாடலில் பிழைகள் இருப்பின் inbo email

மூலம் அறிவியுங்கள்.

ஆ: பூவரசம் பூவுக்குள்ளே

இருப்பதென்ன சொல்லு

பூப்பறிக்கும் மாப்பிள்ளைக்கு

பசிக்குதம்மா நில்லு

பெ: பூவெடுத்து தேனெடுத்து

எதுக்கு இங்கே வரணும்

பரிதவிச்சு பசிச்சு நின்னா

பந்தியும் போட்டு தரணும்

ஆ: ஆடியாடி பாடி வந்து

அலையுதொரு குருவி

பெ: கீச்சு கீச்சு பேசுதையா

மனச கொஞ்சம் துருவி

ஆ: பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி

கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி

மானே மருதாணி பூசவா ஹோ ஓஹ்..

தேனே அடையாளம் போடவா

பெ: மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதய்யா மானே

வளையல் மெட்டு வயச தொட்டு

வளைக்குதய்யா மீனே

ஆ: மந்தாரச்செடி ஓரத்திலே

மாமன் நடத்துற பாடத்திலே

பெ: நானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்

நீயே அடையாளம் போடவா

ஆ: மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதடி மானே

பெ: வளையல் மெட்டு வயச

தொட்டு வளைக்குதய்யா மீனே

Nhiều Hơn Từ Arunmozhi/Swarnalatha

Xem tất cảlogo