menu-iconlogo
logo

Kannmoodi thirakkum

logo
Lời Bài Hát
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல

அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே

தெரு முனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்று இருந்தேன்

தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்

அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்

தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்

உன் பெயரும் தெரியாத உன் ஊரும் தெரியாத

அழகான பறவைக்கு பேர் வேண்டுமா

நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன்

நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா

உயிருக்குள் இன்னோர் உயிரை

சுமக்கின்றேன் காதல் இதுவா

இதயத்தில் மலையின் எடையை

உணர்கின்றேன் காதல் இதுவா

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

வீதி உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண் அடிக்கும்

வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே

நதியோ நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும்

உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே

பூகம்பம் வந்தால் கூட ஓஹோ

பதறாத நெஞ்சம் எனது ஓஹோ

பூ ஒன்று மோதியதாலே ஓஹோ

பட் என்று சரிந்தது இன்று

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல

அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றால

Kannmoodi thirakkum của Devi Sri Prasad - Lời bài hát & Các bản Cover