menu-iconlogo
logo

Velli Nilave

logo
Lời Bài Hát
வெள்ளி நிலவ வெள்ளி நிலவ

நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்

அல்லி மலர அல்லி மலர

நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட

வெள்ளி நிலவ வெள்ளி நிலவ

நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்

அல்லி மலர அல்லி மலரை

நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட

என் கடிகாரம்

அது ஓடலையா

உன்ன பாக்காம

நேரம் போகலையா

அடி உன்ன தான் கடவுள்

பரிசாக கொடுத்தான்டா

வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ

நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்

அல்லி மலர இந்த அல்லி மலர

நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட

முத்தம் ஒன்னு நான் கேட்கும்

நேரத்தில்

ரத்தத்துல சூடேறும்

மொத்தத்தையும் நான் கேட்க

ஏங்குகிறேன்

என் நெஞ்சம் காத்தில் பறக்கும்

உன்னுடைய காலடியில்

அய்யய்யோ

நான் விழுந்து கிடப்பேன்டா

நீ எனக்கு இல்லையின்னா

அம்மாடி

என் உசுர விடுவேன்டா

நான் காலையில கண்முழிச்சு

ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி

நான் சீலையில பூ பறிச்சி

உன் தோளில் மாலை கட்டி போடுறன்டா

அடி எனக்கென்ன ஆச்சு

புரியல பேச்சு

தலகீழா நடக்குறேன்டி

ஓரக்கண்ணில் நீ பார்த்தா

பார்த்ததும்

வானத்துல நான் பறப்பேன்

ஒத்த சொல்லு நீ சொன்னா

சொன்னதும்

உலகத்தை நான் மறப்பேன்

நெஞ்சுக்குள்ள நீ வந்த

வந்ததும்

நீயாக நான் ஆவேன்

தூங்கயிலே நீ வந்து

நின்னதும்

கனவுல முத்தம் கொடுப்ப

அடி காட்டுப்புலி நான்தாண்டி

என்னை இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட

உன் பாசத்துக்கு முன்னாடி

என்னோட சொந்தமெல்லாம் மறந்தேன்டா

அடி ஏழேழு ஜென்மம்

நாம் இங்கு பொறந்து

சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம்

வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ

நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன்

அல்லி மலர இந்த அல்லி மலர நீ

வசியம் செஞ்சு மயக்கிபுட்ட

என் கடிகாரம்

அது ஓடலையா

உன்ன பாக்காம

நேரம் போகலையா

அடி உன்ன தான் கடவுள்

பரிசா கொடுத்தான்டா