menu-iconlogo
logo

Anbe Anbe Nee En Pillai

logo
avatar
Hariharan/Chithra/Vairamuthu/Vidyasagarlogo
பிரகாஷ்ரெத்தினம்logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெ: அன்பே.... அன்பே.... நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெ: கண்ணா என் கூந்தலில்

சூடும் பொன் பூக்களும்

உன்னை உன்னை அழைக்க......

ஆ: கண்ணே உன் கைவளை

மீட்டும் சங்கீ...தங்கள்

என்னை என்னை உரைக்க

பெ: கண்களைத் திறந்து கொண்டு

நான் கனவுகள் காணுகிறேன்

ஆ: கண்களை மூடிக்கொண்டு....

நான் காட்சிகள் தேடுகிறேன்....

பெ: உன் பொன் விரல் தொடுகையிலே

நான் பூவாய் மாறுகிறேன்

ஆ: பூமியில் நான் வாழும் கா...லம் தோறும்

உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆ: யாரும் சொல்லா..மலும்

ஓசை இல்லா...மலும்

தீயும் பஞ்சும் நெருங்க

பெ: யாரைப் பெண் என்பது

யாரை ஆண் என்பது

ஒன்றில் ஒன்று அடங்க........

ஆ: உச்சியில் தேன் விழுந்து

என் உயிருக்குள் இனிக்குதடி.......

பெ: மண்ணகம் மறந்து விட்டேன்

எனை மாற்றுங்கள் பழையபடி

ஆ: உன் வாசத்தை சுவாசிக்கிறேன்

என் ஆயுள் நீளும்படி

பெ: பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்,

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

ஆ: பூமியில் நாம் வாழும் கா.....லம் தோறும்

உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

பூமியில் நாம் வாழும் கா...லம் தோ...றும்

உண்மையில் என் ஜீவன் உன்...னைச் சேரும்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

நன்றி

Anbe Anbe Nee En Pillai của Hariharan/Chithra/Vairamuthu/Vidyasagar - Lời bài hát & Các bản Cover