menu-iconlogo
logo

Megam Karukkuthu

logo
Lời Bài Hát
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது

சாரல் அடிக்குது இதயம் பறக்குது

மேகம் கருக்குது மின்னல்

சிரிக்குது சாரல் அடிக்கிறதே

என் மேனியில் ஆடிய மிச்ச

துளிகள் நதியாய் போகிறதே

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது

சாரல் அடிக்குது இதயம் பறக்குது

நன் சொல்லும் வேளையில்

மழை நின்று போகட்டும்

வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்

மழையே துளி போடு

என் மார்பே உன் வீடு

மேகம் கருக்குது மின்னல் சிரிக்கு

நிலவே வா வா வா

நில்லாமல் வா வா வா

என்னோடு குளிப்பது சுகம் அல்லவா

உன் கரையை சலவை செய்து விடவா

புறாவே வா வா வா

பூவோடு வா வா வா

உன்னோட குளிருக்கு இடம் தர வா

என் கூந்தலில் கூடு செய்து தர வா

காற்றை போல் எனக்கும் கூட

சிறகொன்றும் கிடையாது

தரைமேலே செல்லும் போது

சிறை செய்ய முடியாது

இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்

இன்னும் இன்னும் வளர்த்துக்கொள்வேன்

இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே

காலத்தை நிருத்தி வைப்பேன் ஹொய்

நன் சொல்லும் வேளையில்

மழை நின்று போகட்டும்

வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்

மழையே துளி போடு

என் மார்பே உன் வீடு

கனாவே வா வா வா

கண்ணோடு வா வா வா

விண்வெளியை அளந்திட சிறகு கொடு

விண்மீனில் எனக்கு படுக்கை போடு

மைனாவே வா வா வா

மையோடு வா வா வா

என் கண்கள் அழகின் ஒளி பரப்பு

என் அழகை பரந்து பரந்து பரப்பு

பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது

அதனால் தான் ரெண்டாம் நிலவாய்

நான் வந்தேன் இப்போது

பூக்களில் தூங்கும் பனி துளி அள்ளி

காலையில் குளித்துக்கொள்வேன்

விடிகிறபோது விடிகிறபோது

வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹொய்

நன் சொல்லும் வேளையில்

மழை நின்று போகட்டும்

வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்

மழையே துளி போடு

என் மார்பே உன் வீடு

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது

சாரல் அடிக்குது இதயம் பறக்குது

மேகம் கருக்குது மின்னல்

சிரிக்குது சாரல் அடிக்கிறதே

என் மேனியில் ஆடிய மிச்ச

துளிகள் நதியாய் போகிறதே

...இசையால் இணைவோம்...

..இன்னும் பல சிகரங்கள் தொடுவோம்..

...சகோதரி மஞ்சுவிற்காக...

Megam Karukkuthu của Harini - Lời bài hát & Các bản Cover