menu-iconlogo
logo

Nenjil Nenjil

logo
Lời Bài Hát
ஆண்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே

கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ

என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே

கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ

என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்

ஒரு மின்சாரல் தான் தூவுதோ

என் கனாவில் என் கனாவில்

உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

பெண்:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே

கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ

என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

(இசை)

ஆண்:ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுது

கிழியில் விழையும்

மொழியில் எதுவும் கவிதையடி

அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி

பெண்:விண் மார்பில் படரும்

உன் பார்வை திறவும்

இதயம் புதரில் சிதறிச் சிதறி வழிவது ஏன்

ஓர் உதிரும் துளியில் உதிரம்

முழுதும் நதிர்வது ஏன்

ஆண்:உருகாதே உயிரே விலகாதே மலரே

உன் காதல் வேரை காணவேண்டி

வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

பெண்:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே

கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ

என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

(இசை)

பெண்:பசையூறும் இதழும் பசி ஏறும் விரலும்

விரதம் உடுத்து இறையை விரையும் நேரம் இது

உயிரின் முனையில் மயிரின்

இழையும் தூரம் அது

ஆண்:ஒரு வெள்ளை திரையாய்

உன் உள்ளம் திறந்தாய்

சிறுக சிறுக இரவை திருடும் காரிகையே

விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே

பெண்:விடியாதே இரவே முடியாதே கனவே

நீ இன்னும் கொஞ்சம் நீளக்கோரி

காதல் காரி துடிக்க துடிக்க

ஆண்:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே

கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ

என் நூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

(இசை)

பெண்:என் நிலாவில் என் நிலாவில்

ஒரு மின்சாரல் தான் தூவுதோ

என் கனாவில் என் கனாவில்

உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

Nenjil Nenjil của Harish Ragavendra/Chinmayi - Lời bài hát & Các bản Cover