menu-iconlogo
huatong
huatong
avatar

Oorellam Unnai Kandu

Harris Jayarajhuatong
rideredxr650huatong
Lời Bài Hát
Bản Ghi
இசையமைப்பாளர் திரு.ஹாரீஸ் ஜெயராஜ்

அவர்களுக்கு நன்றி

இந்த அழகிய பாடலை பாடிய

திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கும்

திரு.உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி

ஆண்: ஊரெல்லாம் உன்னை கண்டு

வியந்தாரா

உன்னோடு காதல் சொல்லி

நயந்தாரா

அன்பே உன் பின்னால் யாரும்

அலைந்தாரா

கண்ணே நம் காதல் கண்டு

கலைந்தாரா

இசை

ஆண்: ஊரெல்லாம் உன்னை கண்டு

வியந்தாரா

உன்னோடு காதல் சொல்லி

நயந்தாரா

அன்பே உன் பின்னால் யாரும்

அலைந்தாரா

கண்ணே நம் காதல் கண்டு

கலைந்தாரா

பெண்: ஊரெல்லாம் என்னை கண்டு

வியந்தாரா

என்னோடு காதல் சொல்லி

நயந்தாரா

பெண்: ஒரு முறை உன்னைக் காணும் பொழுது

இரு விழிகளில் ரோஜாக் கனவு

வானத்தை கட்டி வைக்க

வழிகள் உண்டு

நாணத்தை கட்டி வைக்க

வழிகள் இல்லை

இசை

பெண்: ஒரு முறை உன்னைக் காணும் பொழுது

இரு விழிகளில் ரோஜாக் கனவு

வானத்தை கட்டி வைக்க

வழிகள் உண்டு

நாணத்தை கட்டி வைக்க

வழிகள் இல்லை

ஆண்: தங்கம் வெட்கப்பட்டால்

மஞ்சள் வண்ணம் மாறும்

நாணம் கொண்டதாலே

உன் வண்ணம்

பொன் வண்ணம்

செவ்வண்ணம் ஆச்சு வா....

பெண்: கண்ணா நாம் கண்ணும் கண்ணும்

கலப்போமா

காற்றோடு மேகத் துண்டாய்

மிதப்போமா

அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா

ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

ஆண்: துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்

துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்

நேற்றோடு என்னைக் கண்டு

மலர்ந்து விட்டாய்

காற்றோடு மொட்டை போல

உடைந்து விட்டாய்

பெண்: சிங்கம் கொண்ட பாலை

வாங்கி வைப்பதென்றால்

தங்க கிண்ணம் வேண்டும்

கண்ணாளா நான் தானே

உன் தங்கக் கிண்ணம் வா

ஆண்: ஊரெல்லாம் உன்னை கண்டு

வியந்தாரா

உன்னோடு காதல் சொல்லி

நயந்தாரா

அன்பே உன் பின்னால் யாரும்

அலைந்தாரா

கண்ணே நம் காதல் கண்டு

கலைந்தாரா

பெண்: ஊரெல்லாம் என்னை கண்டு

வியந்தாரா

என்னோடு காதல் சொல்லி

நயந்தாரா

அன்பே என் பின்னால் யாரும்

அலைந்தாரா

கண்ணா நம் காதல் கண்டு ம்ம் ம்ம்

CeylonRadio Presentation

( on 31st Aug’19)

Nhiều Hơn Từ Harris Jayaraj

Xem tất cảlogo