menu-iconlogo
logo

Narumugaye

logo
Lời Bài Hát
நறுமுகையே நறுமுகையே

நீ ஒரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து

நீ ஒரு திருமொழி சொல்லாய்

அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றி தரள

நீர் வடிய கொற்ற பொய்கை ஆடியவள் நீயா

அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள

நீர் வடிய கொற்ற பொய்கை ஆடியவள் நீயா

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்

வெண்ணிற புரவியில் வந்தவனே

வேல் விழி மொழிகள் கேளாய்

அற்றை திங்கள் அந்நிலவில்

கொற்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை

பார்வைப் பார்த்தவனும் நீயா

அற்றை திங்கள் அந்நிலவில்

கொற்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை

பார்வைப் பார்த்தவனும் நீயா

மங்கை மான்விழி அம்புகள்

என் மார்துளைத்ததென்ன

மங்கை மான்விழி அம்புகள்

என் மார்துளைத்ததென்ன

பாண்டி நாடனை கண்ட என்

மனம் பசலை கொண்டதென்ன

நிலாவிலே பார்த்த வண்ணம்

கனாவில்லே தோன்றும் இன்னும்

நிலாவில்லை பார்த்த வண்ணம்

கனாவில்லே தோன்றும் இன்னும்

இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை

இடையில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே நறுமுகையே

நீ ஒரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து

நீ ஒரு திரு மொழி சொல்லாய்

அற்றை திங்கள் அந்நிலவில்

கொற்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை

பார்வைப் பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றி தரள

நீர் வடிய கொற்ற பொய்கை ஆடியவள் நீயா

யாயும் யாயும் யாராகியரோ

னென்று நேர்ந்ததென்ன

யாயும் யாயும் யாராகியரோ

னென்று நேர்ந்ததென்ன

யானும் நீயும் எவ்வழி

அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்

உயிர் கோடி பூத்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்

உயிர் கோடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்

அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்

வெண்ணிற புரவியில் வந்தவனே

வேல் விழி மொழிகள் கேலாய்

அற்றை திங்கள் அந்நிலவில்

கொற்ற பொய்கை ஆடுகையில்

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா

அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றி தரள

நீர் வடிய கொற்ற பொய்கை ஆடியவள் நீயா

ஆ ஆ ஆ ஆ ஆ ...

நீயா ..

ஆ ஆ ஆ ஆ ஆ ...

நீயா ..

ஆ ஆ ஆ ஆ ஆ ...

நீயா ..

Thank You

Narumugaye của Ilaiyaraaja - Lời bài hát & Các bản Cover