menu-iconlogo
huatong
huatong
ilayarajas-janaki-kannama-kaadhal-ennum-cover-image

Kannama Kaadhal Ennum

Ilayaraja/S. Janakihuatong
szexiszexihuatong
Lời Bài Hát
Bản Ghi
பாடகர்கள் : இளையராஜா எஸ். ஜானகி

இசை : இளையராஜா

ஆ: கண்ணம்மா

காதல் என்னும் கவிதை சொல்லடி

உன் பிள்ளை தமிழில்

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி

உந்தன் கிள்ளை மொழியினிலே

உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்

துள்ளி துள்ளி வரும் நடையில்

மனம் மெல்ல துடிப்பதும் ஏன்

உன்னை காண வேண்டும் கூட

வேண்டும் வாராயோ வாராயோ

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி

உன் பிள்ளை தமிழில்

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி

Anbudan...athithiya...

பெ: புன்னை மரத்தோப்போரம்

உன்னை நினைந்து

முன்னம் சொன்ன குயில் பாட்டு

சொல்லி மகிழ்ந்தேன்..

பொன்னி நதிக்கரையோரம்

மன்னன் நினைவில்

கண் இமைகள் மூடாது கன்னி இருந்தேன்

ஆ: வெண்ணிலவின் ஒளி கனலாய்

கொதிக்குதடி

எண்ணம் நிலையில்லாமல்

தவிக்குதடி

பெ: உந்தன் செல்ல மொழியினிலே

உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்

துள்ளி துள்ளி வரும் நடையில்

மனம் மெல்ல துடிப்பதும் ஏன்

உன்னை காண வேண்டும் கூட வேண்டும்..

வாராயோ வாராயோ

ஆ: கண்ணம்மா

காதல் என்னும் கவிதை சொல்லடி

உன் பிள்ளை தமிழில்

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி

Anbudan...athithiya...

ஆ: இன்னும் என்னை வெகுதூரம்

கூட்டி செல்லடி..

பண்ணிசையில் பாடங்கள்

மாற்றிச் சொல்லடி

கன்னி உந்தன் மன கூண்டில்

என்னை தள்ளடி

கண் அசைத்து அங்கேயே

வைத்துக் கொள்ளடி

பெ: மந்திரத்தை மாற்றாமல்

கற்று கொடுத்தால்

விந்தைகளை ஏராளம்

சொல்லி தருவேன்

உந்தன் செல்ல மொழியினிலே

உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்

துள்ளி துள்ளி வரும் நடையில்

மனம் மெல்ல துடிப்பதும் ஏன்

உன்னை காண வேண்டும் கூட வேண்டும்

வாராயோ வாராயோ

ஆ: கண்ணம்மா

காதல் என்னும் கவிதை சொல்லடி

உன் பிள்ளை தமிழில்

கண்ணம்மா

காதல் என்னும் கவிதை சொல்லடி

உந்தன் கிள்ளை மொழியினிலே

பெ: உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்

ஆ: துள்ளி துள்ளி வரும் நடையில்

பெ: மனம் மெல்ல துடிப்பதும் ஏன்

ஆ: உன்னை காண வேண்டும் கூட வேண்டும்

பெ: வாராயோ வாராயோ

ஆ: கண்ணம்மா

காதல் என்னும் கவிதை சொல்லடி

உன் பிள்ளை தமிழில்

கண்ணம்மா

காதல் என்னும் கவிதை சொல்லடி

Nandriudan...athithiya...

Nhiều Hơn Từ Ilayaraja/S. Janaki

Xem tất cảlogo